பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேட்டுவ வரி

அடுபுலி அனையவர்: குமரிநின் அடிதொடு படுகடன் இது உகு பலிமுக மடையே!

இறைவியை வேண்டுதல் வம்பலர் பல்கி, வழியும் வளம்பட, அம்புடை வல்வில் எயிண்கடன் உண்குவாய்சங்கரி, அந்தரி , நீலி, கடாமுடிச் செங்கணி அரவு பிறையுடன் சேர்த்துவாய்! துணினெண் துடியொடு துஞ்சுஊர் எறிதரு, கண்ணில் எயினர் இடுகடன் உண்குவாய் விண்ணோர் அமுது உண்டும் சாவ, ஒருவரும் உண்ணாத நஞ்சு உண்டு. இருந்து, அருள் செய்குவாய்! பொருள் கொண்டு புண்செயிண் அல்லதை, யார்க்கும் அருள் இல் எயினர் இடுகடன் உண்குவாய் மருதின் நடந்துநின் மாமண்செய் வஞ்ச உருளும் சகடம் உதைத்து அருள் செய்குவாய்!

அரசனை வாழ்த்துதல் மறைமுது முதல்வன் பின்னர் மேய பொறைஉயர் பொதியிற்பொருப்பண், பிறர்நாட்டுக் கட்சியும் கரந்தையும் பாழ்பட வெட்சி சூடுக விறல்வெய் யோனே!

83

23