பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 சிலப்பதிகாரம்

13. புறஞ்சேரி இறுத்த காதை நிலைமண்டில ஆசிரியப்பா)

இரவை எதிர் நோக்குதல் பெண்ணணி கோலம் பெயர்ந்தபிற் பாடு, புண்ணிய முதல்வி திருந்தடி பொருந்திக் 'கடுங்கதிர் வேனிலிக் காரிகை பொறாஅள்; படிந்தில சீறடி பரல்வெங் கானத்துக் "கோள்வல் உளியமும் கொடும்புற்று அகழா 5 வாள்வரி வேங்கையும் மாண்கணம் மறலா; அரவும், சூரும், இரைதேர் முதலையும், உருமும் சார்ந்தவர்க்கு உறுகண் செய்யாசெங்கோல் தென்னவர் காக்கும் நாடு" என, எங்கணும் போகிய இசையோ பெரிதே' 10 பகலொளி - தண்னினும் பல்லுயிர் ஒம்பும் நிலவொளி விளக்கிண், நீள்.இடை மருங்கின், இரவிடைக் கழிதற்கு ஏதம் இல்' எனக் குரவரும் நேர்ந்த கொள்கையின் அமர்ந்து, கொடுங்கோல் வேந்தண் குடிகள் போலப் 15 படுங்கதிர் அமையம் பார்த்திருந்தோர்க்கு

பால்நிலா

'பண்மீன் தானையொடு பாற்கதிர் பரப்பித் தெண்னவண் குலமுதற் செல்வண் தோன்றித் தாரகைக் கோவையும் சந்தின் குழம்பும் சீர்இள வனமுலை சேராது ஒழியவும், 20 தாதுவேர் கழுநீர்த் தண்பூம் பிணையல் போதுசேர் பூங்குழல் பொருந்தாது ஒழியவும், பைந்தளிர் ஆரமொடு பல்பூங் குறுமுறி செந்தளிர் மேனி சேராது ஒழியவும், மலயத்து ஓங்கி, மதுரையின் வளர்ந்து, 25 புலவர் நாவிற் பொருந்திய தென்றலோடு