பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 சிலப்பதிகாரம்

"இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும் அருமணி இழந்த நாகம் போன்றதும்; இண்உயிர் இழந்த யாக்கை எண்னத் துண்ணிய சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும், 60 ஏவ லாளர் யாங்கணுஞ் சென்று, கோவலன் தேடிக் கொணர்க' எனப் பெயர்ந்ததும்; பெருமகன் ஏவல் அல்லது யாங்கணும் அரசே தஞ்சம் என்று அருங்காண் அடைந்த அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப் 65 பெரும்பெயர் மூதூர் பெரும்பேது உற்றதும்,

மாதவியின் ஒலை வசந்த மாலைவாய் மாதவி கேட்டுப் பசந்த மேனியள், படர்நோய் உற்று, நெடுநிலை மாடத்து இடைநிலத்து - ஆங்கு, ஓர் படை.அமை சேக்கைப் பள்ளியுள் வீழ்ந்ததும்; 70 வீழ்துயர் உற்றோள், விழுமம் கேட்டுத் தாழ்துயர் எய்தித் தான்சென்று இருந்ததும்; இருந்துயர் உற்றோள், "இணையடி தொழுதேன்; வருந்துயர் நீக்கு என, மலர்க்கையின் எழுதி, 'கண்மணி அனையாற்குக் காட்டுக' என்றே 75 மண்உடை முடங்கல் மாதவி ஈந்ததும்; ஈத்த ஒலை கொண்டு, இடைநெறித் திரிந்து, தீத்திறம் புரிந்தோன் சென்ற தேயமும், வழிமருங்கு இருந்து மாசு அற உரைத்து-ஆங்கு அழிவுடை உள்ளத்து ஆர்அஞர் ஆட்டி, 80 போது அவிழ் புரிகுழல் பூங்கொடி நங்கைமாதவி ஒலை மலர்க்கையின் நீட்டஉடன்உறை காலத்து உரைத்த நெய் வாசம் குறுநெறிக் கூந்தல் மண்பொறி உணர்த்திக் காட்டியது; ஆதலின் கைவிடல் ஈயாண்; 85 ஏட்டு.அகம் விரித்து ஆங்கு எய்தியது உணர்வோன்,