பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 சிலப்பதிகாரம்

நாவிக் குழம்பு, நலம்கொள் தேய்வை மாண்மதச் சாந்தம், மணம்கமழ் தெய்வத் தேமெண் கொழுஞ்சேறு ஆடி ஆங்குத் தாதுசேர் கழுநீர், சண்பக்கோதையொடு, மாதவி, மல்லிகை, மனைவளர் முல்லைப் 120 போதுவிரி தொடையல் பூஅணை பொருந்தி, அட்டிற் புகையும், அகல் அங்காடி முட்டாக் கூவியர் மோதகப்புகையும், மைந்தரும் மகளிரும் மாடத்து.எடுத்த அந்தீம் புகையும், ஆகுதிப் புகையும் 125 பல்வேறுபூம்புகை அளைஇ வெல்போர் விளங்குபூண் மார்பிற்.பாண்டியண் கோயிலின் அளந்து உணர்வு அறியா ஆர்உயிர் பிணிக்கும் கலவைக் கூட்டம் காண்வரத் தோன்றிப் புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பின் 130 பொதியில் தென்றல் போலாது, ஈங்கு, மதுரைத் தென்றல் வந்தது காணிர் நனிசேய்த்து அன்று அவன் திருமலி மூதூர், தனிநீர் கழியினும் தகைக்குநர் இல்' என

. பல்வகை ஒலிகள் முன்னாள் முறைமையின், இருந்தவ முதல்வியொடு 135 பின்னையும் அல்லிடைப் பெயர்ந்தனர்.பெயர்ந்து, ஆங்கு, அருந்தெறல் கடவுள் அகண்பெருங் கோயிலும், பெரும்பெயர் மண்னவண் பேர் இசைக் கோயிலும் பால்கெழு சிறப்பின் பல்இயம் சிறந்த காலை முரசக் கனைகுரல் ஒதையும்; 140 நான்மறை அந்தணர் நவின்ற ஒதையும்; மாதவர் ஓதி மலிந்த ஒதையும் மீளா வென்றி வேந்தண் சிறப்பொடு வாளோர் எடுத்த நாள் அணி முழவமும்; போரிற் கொண்ட பொருகரி முழக்கமும்: 145