பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறஞ்சேரி இறுத்த காதை 89

வாரிக் கொண்ட வயக்கரி முழக்கமும்; பணைநிலைப் புரவி ஆலும் ஒதையும், கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணியும்; கார்க்கடல் ஒலியின் கலிகெழு கூடல், ஆர்ப்புஒலி எதிர்கொள. ஆரஞர் நீங்கிக்- 150 வையை கடத்தல் குரவமும், வகுளமும், கோங்கமும், வேங்கையும், மரவமும், நாகமும், திலகமும், மருதமும், சேடலும் , செருந்தியும், செண்பக ஓங்கலும், பாடலம் தண்னொடு பண்மலர் விரிந்து குருகும், தளவமும், கொழுங்கொடி முசுண்டையும் 155 விரிமலர் அதிரலும், வெண்கூதாளமும், குடசமும், வெதிரமும், கொழுங்கொடிப் பகண்றையும் பிடவமும், மயிலையும், பிணங்குஅரில்மணந்த கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கணும் மிடைந்து, சூழ் போகிய அகண்று ஏந்து அல்குல், 160 வாலுகம் குவைஇய மலர்ப்பூந் துருத்தி, பால்புடைக் கொண்டு. பண்மலர் ஓங்கி, எதிர்எதிர் விளங்கிய கதிர்இள வனமுலை; கரைநின்று உதிர்த்த கவிர்இதழ்ச் செவ்வாய்; அருவி முல்லை அணிநகை யாட்டி ió5 விலங்கு நிமிர்ந்து ஒழுகிய கருங்கயல் நெடுங்கண் விரைமலர் நீங்கா அவிர் அறல் கூந்தல் உலகு புரந்து ஊட்டும உயர்பேர் ஒழுக்கத்துப் புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடிவையை என்ற பொய்யாக் குலக்கொடி- 170 தையற்கு உறுவது தான் அறிந் தனள்போல் புண்ணிய நறுமலர் ஆடை போர்த்துக் கணி நிறை நெடுநீர் கரந்தனள், அடக்கிப்புனல்யாறு அன்று. இது பூம்புனல் யாறு' என, அனநடை மாதரும் ஐயனும் தொழுது | 75