பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 சிலப்பதிகாரம்

பரிமுக அம்பியும், கரிமுக அம்பியும், அரிமுக அம்பியும் அருந்துறை இயக்கும் பெருந்துறை மருங்கின் பெயராது; ஆங்கண் மாதவத் தாட்டியொடு மரப்புணை போகித், தேமலர் நறும்பொழில் தென்கரை எய்தி. 180 புறஞ்சிறை அடைதல் 'வானவர் உறையும் மதுரை வலம்கொளத் தான்நனி பெரிதும் தகவுஉடைத்து என்று ஆங்கு அருமிளை உடுத்த அகழிசூழ் போகிக் கருநெடுங் குவளையும், ஆம்பலும், கமலமும், தையலும் கணவனும் தனித்துஉறு துயரம் ஐயம் இன்றி அறிந்தன போலப், | 85 பண்ணிர் வண்டு பரிந்து இனைந்து ஏங்கிக், கண்ணிர் கொண்டு கால்உற நடுங்கப்; போர் உழந்து எடுத்த ஆர்எயில் நெடுங்கொடி, 'வாரல் எண்பன போல், மறித்துக் கை காட்டப்- 190 புள்ளனி கழனியும் பொழிலும் பொருந்தி, வெள்ளநீர்ப் பண்ணையும், விரிநீர் ஏரியும், காய்க்குலைத் தெங்கும், வாழையும், கமுகும், வேய்த்திரள் பந்தரும் விளங்கிய இருக்கை; அறம்புரி மாந்தர் அண்றிச் சேராப் 195 புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்து-எண்.