பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊர் காண் காதை

91

14. ஊர் காண் காதை (நிலைமண்டில ஆசிரியப்பா) சுரலை முரசம் புறஞ்சிறைப் பொழிலும், பிறங்குநீர்ப் பண்ணையும், இறங்குகதிர்க் கழனியும் புள்ளெழுந்து ஆர்ப்பப் புலரி வைகறைப் பொய்கைத் தாமரை மலர்பொதி அவிழ்த்த உலகுதொழு மண்டிலம் வேந்துதலை பனிப்ப, ஏந்துவாள் செழியன் ஓங்குயர் கூடல் ஊர்துயில் எடுப்பநுதல்விழி நாட்டத்து இறையோண் கோயிலும், உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும், மேழி வலண்உயர்த்த வெள்ளை நகரமும், கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும், அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும், மறத்துறை விளங்கிய மண்னவண் கோயிலும், வால்வெண் சங்கொடு வகைபெற் றோங்கிய காலை முரசங் கனைகுரல் இயம்பக்

பாதக் காப்பினள் கோவலன் சென்று. கொள்கையின் இருந்த காவுந்தி ஐயையைக் கைதொழுது ஏத்தி, "நெறியின் நீங்கியோர் நீர்மையேண் ஆகி, நறுமலர் மேனி நடுங்குதுயர் எய்த, அறியாத் தேயத்து ஆரிடை யுழந்து. சிறுமை யுற்றேன், செய்தவத் தீர் யான் தொண்னகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு எண்னிலை உணர்த்தி, யாண்வருங் காறும், பாதக் காப்பினள் பைந்தொடி ஆகலின், ஏதம் உண்டோ அடிகள்! ஈங்கு?" என்றலும்

15

20