பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 சிலப்பதிகாரம்

அந்திக் கோலம் எற்படு பொழுதின் இளநிலா முண்றில் தாழ்தரு கோலம் தகைபா ராட்ட, வீழ்பூஞ் சேக்கைமேல் இனிது இருந்து-ஆங்கு. 85

கார் காலம் அரத்தப் பூம்பட்டு அரைமிசை உடீஇக், குரல்தலைக் கூந்தல் குடசம் பொருந்திச், சிறுமலைச் சிலம்பின் செங்கூ தாளமொடு நறுமலர்க் குறிஞ்சி நாண்மலர் வேய்ந்து, குங்கும வருணம் கொங்கையின் இழைத்துச், 90 செங்கோடு வேரிச் செழும்பூம் பிணையல் சிந்துரச் சுண்ணம் சேர்ந்த மேனியில் அந்துகிர்க் கோவை அணியொடு பூண்டு, மலைச்சிறகு அரிந்த வச்சிர வேந்தற்குக் கலிகெழு கூடல் செவ்வணி காட்டக் 95 கார் அர சாளண் வாடையொடு வரூஉம் காலம் அன்றியும்

கூதிர்க் காலம்

-நூலோர் சிறப்பின், முகில்தோய் மாடத்து, அகில்தரு விறகின் மடவரல் மகளிர் தடவுநெருப்பு அமர்ந்து நறுஞ்சாந்து அகலத்து நம்பியர் தம்மொடு 100 குறுங்கண் அடைக்கும் கூதிர்க் காலையும்

முண்பனிக் காலம

வளமனை மகளிரும் மைந்தரும் விரும்பி இளநிலா முன்றிலின் இளவெயில் நுகர. விரிகதிர் மண்டிலம் தெற்குஏர்பு, வெண்மழை அரிதில் தோன்றும் அச்சிரக் காலையும்- 105