பக்கம்:சிலப்பதிகாரம்-மூலமும் திறனாய்வுமும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஊர் காண் காதை 97

அரும்பெறல் அறிவும் பெரும்பிறிது ஆகத் தவத்தோர் ஆயினும், தகைமலர் வண்டின் நகைப்பதம் பார்க்கும் இளையோர் ஆயினும், காம விருந்தின் மடவோர் ஆயினும், ஏம வைகல் இண்துயில் வதியும், பண்ணும் கிளையும் பழித்த தீஞ்சொல். 165 எண்ணெண் கலையோர் இருபெரு வீதியும்

அங்காடி வீதி வையமும், பாண்டிலும், மணித்தேர்க் கொடுஞ்சியும் மெய்புகு கவசமும்,வீழ்மணித் தோட்டியும், அதள்புனை அரணமும், அரியா யோகமும், | 70 வளைதருர குழியமும், வால்வெண் கவரியும், ஏனப் படமும், கிடுகின் படமும், கானப் படமும், காழ்ஊன்று கடிகையும், செம்பிற் செய்நவும். கஞ்சத் தொழிலவும். வம்பின் முடிநவும், மாலையிற் புனைநவும், j75 வேதினத் துப்பவும். கோடுகடை தொழிலவும், புகையவும், சாந்தமும், பூவின் புனைநவும் வகைதெரிவு அறியா வளந்தலை மயங்கிய, அரசு விழை திருவின் அங்காடி வீதியும்.

நவமணி வீதி காக பாதமும், களங்கமும், விந்துவும், 180 ஏகையும் நீங்கி, இயல்பிற் குன்றா நூலவர் நொடிந்த நுழைநுண் கோடி நால்வகை வருணத்து நலம்கேழ் ஒளியவும்: ஏகையும் மாலையும் இருளொடு துறந்த பாசார் மேனிப் பசுங்கதிர் ஒளியவும்: | 85 பதுமமும், நீலமும், விந்தமும், படிதமும்: விதிமுறை பிழையா விளங்கிய சாதியும், பூச வுருவிற் பொலம்தெளித் தனையவும்: தீதுஅறு கதிர்ஒளித் தெண்மட்டு உருவவும், இருள்தெளித் தனையவும், இருவேறு உருவவும். 190