பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

15


இவர்கள் குடும்பம் தொடர்பில்லாமல் பங்களுரோடு போய் இருந்தது. பின்னரே கல்பனாவின் தாய், தன் சகோதரன் குடும்பத்துடன் அண்டி வந்து, தையல் தைத்துக் கொடுத்து, குழந்தைகளைப் படிக்க வைத்தாள். இரண்டு பேரும் பெண்கள்!

“நீ... என்ன பண்ணிடிருக்கேம்மா, இப்ப?”

“நான் எம். ஏ. ஸோஷியாலஜி பண்ணினேன். இப்ப பி. எச்.டி. பண்ணிட்டிருக்கிறேன். இங்க யுனிவர்சிட்டில என் கைட் இருக்காரு. கொஞ்சநாள் தங்கி ஃபீல்ட் வொர்க் பண்ணனும், வந்திருக்கிறேன்...சாமு, ஆபீசுக்குப் போயாச்சாக்கும்?”

“ஜப்பான் போயிருக்கிறார். வர புதன்கிழமை வரார்.”

“நான் நேத்தே வந்துட்டேன். எங்கம்மாவோட கஸின் ஒருத்தர் இங்கே கரோல்பாக்ல இருக்கார். அந்த அட்ரஸ் குடுத்து அங்கதான் அம்மா போகச் சொன்னா, பாவம், அவங்களே ‘பர்சாதில்’ இருக்காங்க. ரொம்ப சின்ன போர்ஷன். சரின்னு-காலம இந்த அட்ரஸத் தேடிட்டு வந்துட்டேன்...”

“உள்ள வா, குழந்தைகள் ரூமில தங்கிக்கோ...”

கிரிஜா அந்த அறைப்பக்கம் இந்த ‘மடி’ நிலையில் போக மாட்டாள். குளிப்பதற்கு முன் துணிகளை வாரிவந்து, ஒழுங்கு செய்வாள். விசாலமான அறையில் மூன்று கட்டில்கள் இருக்கின்றன. திறந்த புத்தக அலமாரிகள், பெரிய படிப்பு மேசை, காலெட்கள் மேசைமீதும், கட்டில்மீதும் இரைந்து கிடக்கின்றன. ரேடியோ கிராம் துளசி படிந்து மேலே கண்ட கண்ட பொருட்களையும் தாங்கிக் கொண்டிருக்கிறது.

சாந்துக் குப்பி, புத்தகம், குரோஷே ஊசி எல்லாம்...

“பாட்டிக்குச் சாதம் போடணும் ரத்னா. நீ குளிக்கணு மானால் பாத்ரூம் இங்கேயே இருக்கு. குளிச்சிக்க.”