பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

21


கிரிக்கு மீண்டும் கண்ணிர் கொப்புளிக்கிறது. வேதனையுள்ள இடத்தை நேரடியாகக் குத்திக் கொண்டு வருகிறாள் ரத்னா.

“...இந்த கிழத்தை, மொட்டைத், தலையைக் கண்டால் எப்படி ஆத்திரம் வருதுங்கிறீங்க? இதுவே போயி தலைய மொட்டையடிச்சிட்டு வந்திருக்கு. சாமிகளைப் பார்க்கணும்னு. கிரி எனக்கு இதுக ஸைகாலஜியே புரியல. அப்பெல்லாம். அந்தக் காலத்தில தாத்தா செத்துப் போனப்ப இவளுக்கு அதெல்லாம் பண்ணக் கூடாதுன்னு காவலா நின்னாராம். நான் சின்னவ, எனக்கு அவ்வளவா விவரம் தெரியல, உண்மையில எங்கப்பா அம்மாவை தாத்தாவை விட்டுப் பிரிச்சு, அடிச்சி விரட்டியதே இவதான். அப்பா பேரிலே தப்பு இருந்திருக்கும். இல்லேங்கல; ஆனாலும் இவளுக்கு என்னிக்குமே குடிலமான எண்ணந்தான். சிரிச்சே பார்த்ததில்ல...பாட்டின்னா, கிட்ட வராதே தொடாதேன்னு பயந்தான்...”

“இப்ப இதெல்லாம் எதுக்கு ரத்னா? நீ எழுந்து கையலம்பு...!”

“கை கழுவுறது கிடக்கட்டும். உங்களைப் போல எம் ஏ. பி. எட். படிச்சி சுயமா எட்டு வருஷம் வேலை செய்யிறவ, இவளுடைய முட்டாள்தனமான ஆசாரத்துக்கு உட்படுவாளா? இது என்ன மடி. ஆட்களை வதைச்சிட்டு? இவ பிள்ளை, அங்கே இங்க போறானே, மாட்டுக் கறியும், பன்னிக் கறியும் சாப்பிடாமலா இருப்பான்? உங்களை இப்படி வதைக்கிறது மட்டும் என்ன நியாயம்?”

“அடீ, ரத்னா...கத்தாதே. அவ காதுல விழுந்துடப் போகுது...இப்ப எதுக்கு ரகளை வீணா?”

இனிப்பும் கரிப்புமாகக் கண்ணிர் பொங்கச் சுண்டி எறிகிறாள். ரத்னாவைத் தழுவிக் கொள்ள வேண்டும்போல் இருக்கிறது. இந்த ஈரமற்ற மடிக் கூட்டில் மனித சிநேகசு-2