பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

சுழலில் மிதக்கும் தீபங்கள்


இந்தச் சொல்லுக்குக் காத்திருந்தாற்போல இன்னொரு ரிக்‌ஷாவையும் பேசுகிறாள்.

முன்பு தங்கிய அதே விடுதிதான். இந்நாள் கைமாறி இருக்கிறது. பின்புறத்துப் படிகளில் கங்கை பெருகி ஓடுகிறது. சில்லென்ற நீர் பட்டதுமே உடல் சிலிர்க்கிறது: உள்ளத்தில் அது உணர்வின் வெள்ளமாகப் பாய்கிறது.

தீப ஆரத்தி விடும் நேரம்.

கெளரி அம்மாள், கணவரைப் படியில் உட்கார்த்தி வைத்து, புனித கங்கையைச் செம்பால் எடுத்தி ஊற்றி நீராட்டுகிறாள்.

கிரிஜா, அவர்கள் மூட்டைகளுடன் பையை வைத்து விட்டு வெளியே வந்து, அகன்ற படித்துறையில் அமர்ந்து கங்கையின் ஓட்டத்தில் ஒன்றிப் போகிறாள்.'கடந்த காலம், நிகழ்காலம் என்ற உணர்வுகள் கரைகின்றன.


8

காலையில் அவர்கள் இருவரும் எழுந்திருக்கும் முன் கிரிஜாவுக்கு விழிப்பு வந்து விடுகிறது. பல்லைத் துலக்கி விட்டு மாற்றுச் சேலையை எடுத்துக்கொண்டு ‘ஹரி கிபைரி’யை நாடி நடக்கிறாள். கங்கையை ஒட்டிய சந்தில் உள்ள கடைகள் விழித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியக் கலாசாரத்தின் இழைகள் சமயத் தறியில்தான் பின்னப் படுகின்றன. பெண்கள் விரும்பும் அணிமணிகள், சேலை துணிகள், பாத்திரங்கள், யாத்திரீகர்களுக்குத் தேவையான பெட்டிகள், மற்றும் கங்கைநீர் முகர்ந்து செல்ல உதவும் அலுமினியத் தூக்குகள், பித்தளைச் செம்புகள், பிளாஸ்டிக் கேன்கள் பூசனைக்குரிய பல்வேறு வெங்கலப்படிமங்கள்... என்று முடிவேயில்லை; மிட்டாய்க் கடைகளில் புதிய நெருப்பு புகைகிறது. புதியபால் வந்து இறங்குகிறது. ஏற்கெனவே ஒரடுப்பில் பெரிய இரும்பு வாணலியில் பால் காய்கிறது...சந்து