பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

68

சுழலில் மிதக்கும் தீபங்கள்


‘தருமராஜனா? ... அப்படி இங்கு யாரும் இல்லை... நீங்க யாரு?... எங்கேருந்து வராப்பல?’

‘நா...ன் எனக்கு...டெல்லிலேந்து இப்ப வரேன்...’ அவள் தயங்கிச் சொல்லி முடிக்குமுன் உள்ளிருந்து தருமனே வந்து விடுகிறான்.

‘அடடா, வாங்க டீச்சர், வாங்க!... சுவாமிகளப் பார்க்கணுமா?’

‘இவனைத்தான் கேட்டேளா.. அவருடைய ஆர்வம் விழுந்து விடுகிறது. ஏண்டா, உன்பேர் தருமராஜனா?. இவன அசட்டுப் பிச்சன்னு கூப்பிட்டாத்தான் தெரியும்; இவனுக்கு இப்படி நேர்மாறாக ஒருபேரை ஏத்திவச்சா...?

‘நீங்க வாங்க டீச்சர் ...! அவா...எங்க டீச்சர், மாமா, பெரிய... டீச்சர். இங்க டில்லில இருக்கா...’

‘சரி சரி கூட்டிண்டுபோ.’

கிரிஜா, கெளரியம்மாள், நியம ஆசாரங்கள் துலங்கும் கோலத்துடன் அவள் கணவர் ஆகியோருடன் அவன்முன் செல்கிறாள்.

சுவாமிகள் வீற்றிருக்கும் இடத்தில் கைகட்டி வாய் பொத்தி இருவர் உடன் இருக்கின்றனர். அவருக்கு முன் அடுக்கான கோப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. வேறொருவர் அவர் வீற்றிருக்கும் பலகையின் கீழ், பணிவாக, அவர் பணிக்கும் உத்தரவுகளை ஏற்று கோப்புக் கடிதங்களுக்குப் பதில் எழுதச் சித்தமாக அமர்ந்திருக்கிறார். ஜன்னலாகத் தெரியும் வாயிலின் முன் இவர்கள் நிற்கின்றனர். கெளரியம்மாளின் கணவர், ஏதோ வடமொழி சுலோகத்தை முணமுணப்பைவிட உரத்த குரலில் சொல்லிக் கொண்டிருக்கிறார். சுவாமிகளுக்கு முன், பணிவும் குறுகலுமாகக் கூனிக் கைகுவித்து தருமன் நிற்கிறான். ஐந்து நிமிடங்கள் பத்து நிமிடங்கள் என்று ஒடுகின்றன. இவர்கள் நிற்பதை அறிந்தாற்