பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/81

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம் கிருஷ்ணன்

79


கிரிஜா மலைத்துப் போய் பார்க்கிறாள். அவளையொத்த வயசுகூட இருக்காது, அத்தனை ஆண்டுகளுக்கு முன்னால், அப்படியானால்...வாழ்க்கை நீரோட்டத்தை விட்டு விலகி, துறவறம் என்று இங்கே வந்து ஒதுங்க இவளுக்கு உந்து சக்தியாக இருந்தது எது? திருமணமாகாமல் அக்காலத்தில் இருந்திருக்கலாகாது. திருமணம் முடிந்து கைம்பெண்ணாக இருந்தால்...

‘ஏம்மா? உன்னைப் பார்த்தால் களைப்பாகத் தெரியறது. எதானும் சாப்பிட்டயோ?...’

கிரிஜா புன்னகை செய்கிறாள். ‘இப்பத்தானே பழம் சாப்பிட்டேன்?’

‘...பழம்தனே? சாதம் எதானும் சாப்பிட்டியோன்னு கேட்டேன்...’

‘இங்க எதானும் ஒட்டல் இருக்கா?’

‘ஒட்டல் கிடக்கட்டும். நீ உள்ளே வா, ஒருபிடி மோரும் சாதமாச் சாப்பிடு!’

கிரிஜாவுக்கு ஒன்றும் புரியவில்லை.

கெளரியம்மாள் பயணத்தில் இசைந்து ஃபிளாஸ்கைத் திறந்து காபி கொடுத்தாள். அதுவே அதிகமாக இருந்தது. இப்போது முன்பின்னறியாத இடத்தில், முன்பின்னறியாத மூதாட்டி, ‘உள்ளே வா, ஒருபிடி சாப்பிடு’ என்று கூப்பிடுகிறாள்.

‘முன்பின் அறியாதவர்கள் உணவுப் பொருளோ தின்பண்டமோ கொடுத்தால் சாப்பிடாதீர்கள். கீழே ஏதேனும் பார்சல், அல்லது சிறு பெட்டி போன்ற பொருள் இருந்தால் எடுக்காதீர்கள்...!’ இதெல்லாம் அண்மைக்கால எச்சரிக்கைகள். ஆனால், முன்பின் நினைத்திராத விதமாக, அவள் ஒரு சீரான ஒடுக்கத்திலிருந்து விடுபட்டு இந்த முடிவு தெரிவிக்க கரையில் நிற்கையில் இப்படி ஒர் அநுபவ மலர்