பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/88

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

சுழலில் மிதக்கும் தீபங்கள்


‘பாட்டி, நான்...உங்ககிட்ட மனம் திறந்து சொல்றேன். இங்க நான் ஆறுதலுக்காக வந்தேன். குடும்பத்தில் இரண்டு பெண்ணும் ஒரு ஆணும் குழந்தைகள். பணம் வசதி இருக்கு. ஆனா, காலமேந்து ராவரை, உடம்பு உழைப்பு. மெஷின் போல. ஒரு பக்கம் கட்டுக்களே இல்லாமல் ஒடப்பார்க்கும். தலைமுறை. இன்னொரு பக்கம், ஸ்டவ் திரியை நனைத்து உலர்த்து என்று சொல்லும் மாமியார். இந்த இரண்டுக்கும் கட்டுப்பட்டுப் பூச்சியாகப் போயாச்சு. ஆனால், இப்ப, இந்தக் கூட்டில் மனுஷத் தன்மையே இல்லைன்னு புரியறது. என்னால் இருக்கமுடியல. நான் பதினைந்து வருஷம் படிச்சு, பத்து வருஷம் கற்பிச்சு, அறிவாளியாக என்னை மலர்த்திக் கொண்டவள். கல்யாணம் என்ற அமைப்புக்குள், கீழ்ப்படியும் ஒன்றைத்தவிர வேறு எதற்கும் உனக்கு இடமில்லை என்பது சரியா?...நான் எப்படி அங்கு இருக்க? நீங்கள் சொன்னிர்கள், ஒன்றும் தெரியாத நான், என் அநுபவத்தில் எத்தனையோ கற்றுக் கொண்டேன்னு. அன்றாட சமையல், சுத்திகரிப்பில் கூடக் காலத்துக்கும் வசதிக்கும் ஏற்ற புதிய வழக்கங்கள் வரக் கூடாது. பழைய மரபை சுமந்து கொண்டே இருக்க வேணும்னா, என்ன செய்ய? இந்த மாதிரி ஒரு பிரச்னையை நீங்கள் நினைத்திருப்பீர்களா?” வெயிலின் கடுமை மாற மேகம் மூடிக்கொள்கிறது.

பாட்டி அரைக்கண் மூடி அநுபவிப்பவளைப்போல அவள் பேச்சுக்களைச் செவியுறுகிறாள்.

“உன் பேரென்னவோம்மா, ஒண்னு சொல்றேன். பிரச்னை, பிரச்னைன்னு நினைச்சிண்டே இருந்தா குழம் பிண்டே இருக்கணும். சுவாமிஜி சொல்வார். பொறுக்கலன்னா எழும்பிப் போராடு; தெளிந்துகொள், இரண்டிலொன்னு முடிவு செய்துடனும், அந்த முடிவைப்பத்திப் பிறகு அலட்டிக்கப்படாது. அப்படி, பிரச்னை பிரச்னைன்னு, சிக்கலிலிருந்து விடுபட நமக்குச் சக்தி இருக்குன்னு தைரியமில்லாமலேயே உசிரை மாய்த்துக்கறதே, ரொம்பக் கோழைத்