பக்கம்:சுழலில் மிதக்கும் தீபங்கள்-தமிழ்நாடு அரசுப் பரிசு.pdf/94

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

சுழலில் மிதக்கும் தீபங்கள்


சிரிப்பும் எப்படி எல்லோாையும் மயங்க வைக்கின்றன?

‘நாளைக்குக் காலம கொண்டு பேரும் புறப்பட்டு அமெரிக்கா போறோம். பிள்ளைக்குக் கல்யாணம் நிச்சயம் பண்றோம், இல்லாட்டா, நம்ம வீட்டில வந்து தங்கிட்டுப் போகணும்னு கூப்பிடுவேன். யார்யாரெல்லாமோ வந்து தங்கறான்னு ரொம்பச் சொன்னா. இன்னொருதரம் வரச்சே கண்டிப்பா இங்க வந்து தங்கணுமின்னு அட்ரஸ் எழுதிக் குடுத்திருக்கா...’

கிரிஜா அப்படியே நின்று கேட்கிறாள். ஒரு வகையில் நிம்மதியாக இருக்கிறது. காலை ஃபிளைட்டில் ஊருக்குப் போய் விடுவார்கள். இவள் ஊர் திரும்பும்போது, அவளும் வந்து ஏதும் கலவரம் நிகழாது...

பொழுது விடிந்ததும் காலை நீராடலும் உணவும் முடித்துக் கொள்கிறார்கள் கெளரியம்மாள் ஈரச்சேலையைக் கூட உலர்த்திக் கொள்கிறாள் கடையில் சென்று பேரம் பேசி, கங்கைச் செம்புகள். ஸிந்துாரம், அப்பளக் குழவி என்று அவள் வாங்கிக் கொள்ள கிரிஜா உதவி செய்கிறாள்.

‘பெற்ற பெண்ணைப்போல் பழகிட்டே. ஏதோ போன ஜன்மாவிலே விட்டகுறை தொட்ட குறை போல இருக்கு. நீயும் எங்க கூட வரத்தானே போறே?’

‘ஆமாம், மாமி, அஞ்சு நாள் லீவெடுத்தாச்சு ...’ என்று கிரிஜா சிரிக்கிறாள். ஒரு தெம்பும் தெளிவும் வந்ததற்கு இப்போது கூடியிருக்கிறது. இரவு ரயில் வண்டியிலேறி, விடியும் போது டில்லி சென்றால், வெளிச்சத்தில் வீடு செல்வது வசதி யாக இருக்கும் என்று கிரிஜா சொல்கிறாள்.

திரும்பும் பயணத்தில் கெளரி அம்மாளும் கிழவரும் உறங்கிவிடுவதால், பேச்சுக்கே இடமில்லை.