பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பரிபாடலும்
கலித்தொகையும்




ட்டுத் தொகை நூல்களுள் பாவின் பெயரைப் பெற்ற தொகை நூல்கள் பரிபாடலும் கலித்தொகையும். அதன் ஐற்திணையாகிய அபப்பொருட் செய்திகளைப் பாடுதற்கு உரிய தகுதி வாய்ந்த பாவாக இவ் இரண்டினையும் தொல்காப்பியர் குறித்துள்ளனர்.

நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்
பாடல் சான்ற புலனெறி வழக்கம்
கலியே பரிபாட்டு ஆயிரு பாங்கினும்
உரியதாகும் என்மனார் புலவர் (அகத் 53)

பா அமைப்பிலும் பரிபாடலும் கலியும் பெரிதும் ஒப்புமை உடையன. இவ் இரண்டையும் வெண்பா நடைத்து எனத் தொல்காப்பியர் கூறுவர் கொச்சகம், அராகம், சுரிதகம், எருத்து, என்னும் உறுப்புக்கள் இவ் இரண்டு பாவிற்கும் பொதுமையானவை மேலும், இவ் இரண்டையும் இசைப்பாட்டு எனவும் உரையாசிரியர் முதலியோர் குறித்துள்ளனர். இவ்வகை ஒப்புவமைகளால் இவற்றை வேறுபடுத்துக் கண்டு கொள்ளுதல் அத்தனை எளிதன்று. ‘பரிபாடல் பரிந்து வருவது; அஃதாவது, கலியுறுப்புப் போலாது பல அடியும் ஏற்று வருவது' (செய்யு.118) எனப் பேராசிரியர் கூறும் விளக்கம் இவ் இரண்டு பாடல்களின் வேற்றுமைத் தன்மையை ஒருவாறு புலப்படுத்தும்.