பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 2.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

செந்தமிழ் பெட்டகம்

டையே இயங்கும் கதைகளிலும், நம்பிக்கைகளிலும், சடங்குகளிலும், பிற பாவனைகளிலும், சிறப்பாகக் கோயில் அமைப்பிலும், வழிபடு முறைகளிலும் திருத்த மான கவிதைத் தன்மை இந்தியாவில் வாய்ந்திருப்பதை இன்றும் பார்க்கலாம்.

கிரகணம், வானவில் இவற்றின் விஞ்ஞானம் விளக்கம் எதுவானாலும், இவற்றைக் குறித்துப் பல நாடுகளில் உலவி வரும், பழைய நம்பிக்கைகளில் கவிதை உண்மை உண்டென்று கொள்ள வேண்டும். நமது புறக்கண் பொருள்களின் வெளித்தோற்றத்தைக் காண்பது போல், அகக்கண் உள்ளக்காட்சியை உணர்கிறது. கவிதை உண்மையும் விஞ்ஞான உண்மையும் வேறு பட்டாலும் இரண்டும் உண்மையேயாகும். விஞ்ஞான உண்மை பொருளோடு உடன்பாடுடையது; கவிதை உண்மை கவியின் கற்பனையில் தோன்றி, மக்களால் ஏற்கப்பட்டு, மக்கள் கற்பனையோடு உடன் பாடுடையது. ஒரு மொழியினராகிய மக்களுக்குச் சொற்கள் எப்படி உதவுகின்றனவோ, அப்படியே கவிகள் தோற்றுவிக்கும் பாத்திரங்களும் அமைப்புக்களும் சிந்தனை வளர்ச்சிக்கு உதவுகின்றன; ஆழ்ந்த உணர்ச்சிகளையும, தரும சங்கடங்களையும், வாழ்க்கைத் தத்துவங்களையும் மக்கள் மனத்திலே பதியச் செய்து, அகக் கண்ணைத் திறந்து, பொது மக்களையும் கவியுள்ளம் படைத்தவராக்கி விடுகின்றன. இந்திய நாட்டிலே இன்றைக்கும் இலக்கியக் கவிதையோடு வாழ்க்கை கவிதையும் கலந்திருப்பதைக் கண்டு யுங், சிம்மர் போன்ற மேனாட்டு உளவியலறிஞர்கள் வியந்தும் மெச்சியும் உள்ளார்கள்.

கவி தனி மனிதனேயாயினும், அவன் இயற்றும் கவிதை அவனுங்ககும் இனத்தாருக்கும் பொதுவாயுள்ள ஆழ்ந்த உள்ளத்தலிருந்து தோன்றுகிறது; அவர்களை ஆழ்ந்த உள்ளத்தில் ஒன்றாய்ப் பிணைக்கிறது. மாத்தியூ ஆர்னல்டு 'மார்கரிட்' என்ற மாதுக்கு எழுதிய பாடலில்