தான், மூன்று மாதம் தண்டனை! இரண்டாவது பையன் இன்ன இடம் போனானென்று தெரியவில்லை, எவனோ ஜாலவித்தைக்காரன் வந்தான் அவனோடு ஓடிவிட்டான். மூன்றாவது பெண்! அது, மூன்றேநாள் ஜுரத்திலே, போய்விட்டது. நாலாவது பையன்; அவன் தோட்டத்துக்கிணற்றிலே தவறி விழுந்துவிட்டான். அடுத்தடுத்துக் கிடைத்தன இத்தபால்கள். வானப்பிரஸ்தத்திலே இருந்த மதுரையின், துக்கம் சம்பூர்ணமாக, அவனுடைய பெற்றோர்கள், பிச்சை எடுக்கிறார்கள் என்றோர் தபாலும் கிடைத்தது. உடனே, அவன் ரப்பர் தோட்டவேலையையும் விட்டுவிட்டான். அலைந்தான்! அலைந்தான்! ஐயா கொஞ்சம் சோறு என்று கேட்டுப் பார்த்தான்! எச்சில் இலைகளிடம் உறவுகொண்டான்! ஆண்டி சிலரின் நேசம் பெற்றான். காவி அணிந்தான். நீறு பூசினான்! கஞ்சாவுடன் கொஞ்சினான். சன்யாஸ் ஆஸ்ரமத்திலே பிரவேசித்தான். வேலைகிடையாது! கூலி கேட்கத் தேவையில்லை! குடும்பம் இல்லை, எனவே பொறுப்பு கிடையாது! கிடைத்தால் புசிப்பது! கிடைக்குமட்டும் பஜிப்பது!! இந்தச் சன்யாச ஆஸ்ரமத்திலே, வானப்பிரஸ்த வாட்டமோ கிருஹஸ்தாஸ்ரமக் கஷ்டமோ இல்லை! அது மட்டுமா! பிரம்மச்சரிய ஆஸ்ரமத்தின் தனிமையும் இதிலே இல்லை! சன்யாசி மதுரைக்குச் சன்யாசினி ஒருவளும் கிட்டிவிட்டாள்! அவளுக்கும் "அரோகரா” கூறத் தெரியும் இவன்போலவே!! ஆகவே இவனால்தான் பிழைத்தாக வேண்டுமென்ற நிலை இல்லை அவளுக்கு. ஆனால் அவளுக்கு ஒரு "அவன்" தேவை! சன்யாஸ் ஆஸ்ரமத்திலே, மதுரை சஞ்சலமின்றி இருந்து வந்தான்.
✽✽✽
இந்து மார்க்கத்திலே உள்ள இலட்சிய எழில்கள், சாமான்யமானவையல்ல. தர்மம், அர்த்தம், காமம், மோட்-
33