பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எஸ். எம். கமால்

23

களைப் போன்று இராமேஸ்வரம் சேதுராமநாத பண்டார நியமனம் நமக்கு நினைவூட்டுவதாக உள்ளது.

இந்த மன்னரது ஆட்சிக்காலத்தில் இராமேஸ்வரம் திருக்கோயில் சிறப்பான ஆதரவினைப் பெற்றது போன்று தேவாரப்பதிகம் பெற்ற திருவாடானைத் திருக்கோயிலும் இந்த மன்னரது அறக்கொடைகளுக்கு உரியதாக இருந்தது என்பதை இராமநாதபுரம் சமஸ்தான ஆவணங்கள் தெரிவிக்கின்றன. கி.பி. 1605இல் கருப்பூர் கிராமமும், கி.பி. 1606ல் அச்சங்குடியையும், 1615ல் நாகனேந்தல், இரட்டை ஊரணி, வில்லடிவாகையையும் அறக்கொடையாக இந்த மன்னர் வழங்கியுள்ளார். இந்த ஊர்களில் இருந்து சேதுபதி மன்னருக்கு வரப்பெறுகின்ற அனைத்து வருவாய்களும் சம்பந்தப்பட்ட கோயிலுக்குக் கிடைப்பதற்கான வாய்ப்பு ஏற்பட்டது.

இவ்வாறு சிறப்பாக ஆட்சிபுரிந்த முதலாவது சடைக்கத் தேவர் நான்கு மக்களாகிய கூத்தன், தளவாய் (எ) சடைக்கன். கலியானப் புலித்தேவர், காதலி நாச்சியார் என்ற மக்களையும் தனது வாரிசுகளாக விட்டுவிட்டு 1622ல் காலமானார்.

எட்டையபுரம் வரலாற்றினை எழுதிய கணபதியாப்பிள்ளை என்பவர். இந்த சேதுபதி மன்னர் தெற்கே நம்பிபுரம் என்ற ஊரின் அருகில் நடந்த போரில் தனது முடியையும், அணிமணிகளையும் இழந்துவிட்டு உயிர்தப்பி ஓடினார் என வரைந்துள்ளார். ஆனால் இதனை உறுதி செய்யும் தகவல் இராமநாதபுரம் மெனுவலிலும் வேறு ஆவணங்களிலும் காணப்படவில்லை.

II கூத்தன் சேதுபதி
(கி.பி. 1622 - 1635)

போகலுரைத் தலைநகராகக் கொண்ட சேதுநாட்டின் இரண்டாவது மன்னராக முடிசூடிக் கொண்டவர் கூத்தன் சேதுபதி ஆவார். இவரது ஆட்சிக்காலம் கி.பி. 1622ல் தொடங்கி கி.பி. 1635ல் முடிவுற்றது. ஒரு மன்னரது செம்மையான ஆட்சியைச் சுட்டுவதற்கு அவரது ஆட்சிக்காலம் ஒரு முக்கியமான குறியீடு ஆகும். இந்த மன்னரது ஆட்சி 14 ஆண்டுகளுக்குள் அமைந்து முடிவுற்றாலும் சேது நாட்டின் சமுதாய ஆன்மீகப் பணிகளுக்கு ஏற்ற வடிகாலாக இருந்து வந்ததை வரலாறு விளக்குகிறது.

பொதுவாகக் கார்காலத்தின் மழைப்பொழிவினை நம்பிய வகையில் இந்த நாட்டு மக்கள் தங்களது விவசாயப் பணிகளைத் தொடர்ந்து வந்தனர்