பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

சேதுபதி மன்னர் வரலாறு

திருமலையை கி.பி.1751ல் மதுரை மன்னராக்கிவிட்டு இராமநாதபுரம் திரும்பினார். இவர் திருப்புல்லாணித் திருக்கோயிலுக்கு வந்து செல்லுகின்ற பயணிகளுக்காகத் திருப்புல்லாணியில் சத்திரம் ஒன்றை அமைத்து உதவினார். இந்த சத்திரத்தின் பயன்பாட்டிற்காக அண்மையில் உள்ள காஞ்சிரங்குடி என்ற கிராமத்தைச் சேதுபதி மன்னரிடமிருந்து தானமாகப் பெற்றார். இவர் எப்பொழுது பதவி விலகினார் அல்லது இறந்தார் என்பதை துலக்கும் ஆவணங்கள் எதுவும் இல்லை.

VI. செல்லமுத்து விஜய ரகுநாத சேதுபதி

இவரது 14 ஆண்டு கால ஆட்சியில் மூன்று சிறப்பான நிகழ்ச்சிகள் வரலாற்றில் பதிவு பெற்றுள்ளன. முதலாவது, தஞ்சை மராத்தியரது படைகள் இவரது ஆட்சி காலத்தில் சேது நாட்டின் வடபகுதியை ஆக்கிரமித்து இராமநாதபுரம் கோட்டை நோக்கி முன்னேறி வந்தது. இந்தப் படையெடுப்பையும் தளவாய் வெள்ளையன் சேர்வைக்காரர் முறியடித்து சேதுநாட்டுத் தன்னரசு நிலையை நிலை நாட்டினார்.

இரண்டாவது நிகழ்ச்சி, கீழக்கரையில் டச்சுக்காரர்கள் ஒரு தொழிற்சாலையை அமைத்துத் தூத்துக்குடிப் பரவர்களைக் கொண்டு அங்கு நெசவுப்பட்டறை தொடர்வதற்கு அனுமதி அளித்தார். நாளடைவில் டச்சுக்காரர்கள் அந்தத் தொழிற்சாலைப் பகுதியைச் சுற்றி சுவர் எழுப்பி ஒரு சிறு அரணாக மாற்ற முயற்சித்தனர். தகவலறிந்த சேதுபதி மன்னர் அந்த அரணைப் பீரங்கிகளால் இடித்துத் தகர்த்தெறியுமாறு உத்தரவிட்டார். உடனே டச்சுக்காரர்களின் தலைமை இடமான துத்துக்குடியிலிருந்து வந்த துதுக்குழுவினர் சேதுபதியைச் சந்தித்து அவருடைய நடவடிக்கையைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர். சீற்றம் கொண்ட சேது மன்னர் அத்துாதுக்குழுவினரைச் சிறையிடும்படி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து துத்துக்குடியிலிருந்து டச்சுக்காரர்கள் கீழக்கரைக்கு ஒரு போர்க்கப்பலை அனுப்பி வைத்தனர். நிலைமை மிகவும் மோசமானதை அறிந்த கீழக்கரை சின்னத்தம்பி மரைக்காயர் என்பவர் டச்சுக்காரரின் பொருட்டு சேதுபதி மன்னரைச் சந்தித்து, சேதுமன்னரும் டச்சுக்காரரும் போரிடும் நிலையைத்தவிர்க்க உதவினார். அதன்பிறகு டச்சுக்காரருக்கும் சேதுபதி மன்னருக்கும் இயல்பான உறவு நீடித்தது.

மூன்றாவது நிகழ்ச்சி தமிழ்நாட்டில் ஆற்காடு நவாபு பதவிக்கு கடைசி நவாபாக இருந்த தோஷ்து முகம்மது என்பவரது மருமகனாகிய சந்தா சாகிபும், நவாபின் மைனர் மகனுக்குப் பாதுகாவலராக நியமிக்கப்பட்ட அன்வர்தீனும் போட்டியிட்டனர். அப்பொழுது ஹைதராபாத் நிஜாம்