பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

சேதுபதி மன்னர் வரலாறு

சேதுபதியும் பாதுகாப்புக் கைதியாக திருச்சிக் கோட்டையில் அடைக்கப்பட்டனர். அங்கு சிறை வாழ்க்கையின்போது ராணியும் அவரது இளைய மகளும் காலமானார்கள்.

நவாபின் ஆட்சி

சேது நாட்டில் ஆற்காடு நவாபின் நிர்வாகம் 8 ஆண்டுகள் தொடர்ந்தன. இந்தக் கால கட்டத்தில் ஏற்கனவே தஞ்சை மன்னரது உதவியும் இராமநாதபுரம் சீமையைத் தாக்கிய ஆறுமுகம் கோட்டை மாப்பிள்ளைச்சாமித் தேவர் மைசூர் மன்னர் ஹைதர் அலியின் உதவி பெற்றுச் சேதுபதிச் சீமையில் ஆற்காடு நவாபு நிர்வாகத்தை எதிர்த்துப் போரிட்டார். நவாபின் ஆட்சியில் புகுத்தப்பட்ட அரசாங்க ஆண்டு முறை ஹிஜிரி கணக்கு சேதுநாட்டுப் பணத்திற்குப் பதில் ஆற்காடு வெள்ளி ரூபாய் போன்ற புதிய மாற்றங்களினால் அதிருப்தியுற்ற மக்கள், மாப்பிள்ளைச்சாமித் தேவருடன் இணைந்து எதிர்ப்பு அணியைப் பலப்படுத்தி வந்தனர். இதே காலக்கட்டத்தில் சிவகங்கைச் சீமையையும் ஆக்கிரமித்து அங்கிருந்த மன்னர் முத்துவடுகநாத தேவரை 25.05.1772-ல் காளையார் கோவில் போரில் கொன்று, சீமையின் நிர்வாகத்தை, ஆற்காடு நவாபு ஏற்றிருந்ததால் அங்கும் அதிருப்தி நிலவியது. அடுத்து கி.பி. 1780 ஜூன் மாதம் மைசூர் மன்னர் ஹைதர் அலி வழங்கிய குதிரைப்படைகளின் உதவி கொண்டு மன்னரது விதவை மனைவி இராணி வேலுநாச்சியார் மீண்டும் சிவகங்கையில் மறவராட்சியை ஏற்படுத்தினார்.

இந்தச் சூழ்நிலையில் இராமநாதபுரம் சீமையும் தன்னுடைய கையைவிட்டு நீங்காமலிருப்பதற்காக ஆற்காடு நவாபு ஒரு திட்டத்தினை உருவாக்கி சேதுபதி மன்னரது ஒப்புதலையும் பெற்றார். இதன்படி சேதுபதி மன்னர் ஆற்காடு நவாபின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு ஆண்டுதோறும் அன்பளிப்புத் தொகையாக (பேஷ்குஷ்) ஒரு இலட்சம் ரூபாய் வரை நவாபிற்கு செலுத்தவும் சம்மதித்தார். காலமெல்லாம் திருச்சிக் கோட்டையில் சிறைக்கைதியாக இருந்து சாவதை விட நவாபினது இந்த நிபந்தனையை ஏற்றுக் கொள்ளுவதன் மூலம் சிறை வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டு மீண்டும் சேதுபதி மன்னரான பிறகு நவாபையும், பரங்கியரையும் உறுதியாகவும் இறுதியாகவும் அழித்து ஒழித்து விடலாம் என அந்த இளம் மன்னர் திட்டமிட்டிருந்தார்.

மீண்டும் சேதுபதி மன்னர் ஆட்சி:

பின்னர் சேதுபதி மன்னர் பல விறுவிறுப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டார். சேது நாட்டில் வறட்சி ஏற்படும்போது தஞ்சைச் சீமையிலிருந்து தானியங்களைக் கொள்முதல் செய்து வந்து மக்களுக்கு