பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

சேதுபதி மன்னர் வரலாறு

மண்டபம், மகா மண்டபம் போன்ற அமைப்பில் இந்தக் கட்டுமானம் திட்டமிடப்பட்டுள்ளது.

கிழக்கு நோக்கியுள்ள இந்த மண்டபத்தின் 16 படிகளைக் கொண்ட நுழைவாயிலின் இருபுறமும் ஒரே மாதிரியான யாளியின் சிற்பங்கள் கருங்கல்லினால் அமைக்கப்பட்டுள்ளன. முன்புறம் உள்ள மகா மண்டபம் போன்ற விசாலமான மாளிகையின் இருபுறமும் நீண்டு உயர்ந்த 24 தூண்களைக் கொண்ட அமைப்பை அடுத்து அர்த்த மண்டபம் போன்ற இடைக்கட்டும் இந்த மண்டபத்தின் தளத்திலிருந்து நான்கடி உயரத்தில் 16 தூண்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கருவறை போன்ற விசாலமான அறை மன்னரது சொந்த உபயோகத்திற்காகக் கருங்கல்லினால் ஆன வாசலுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறையின் மேல் தளத்திலும் மற்றொரு அறையும் அதற்கு மேலே நிலாக்கால இரவுகளை மன்னரும், அரச பிராட்டியும் மகிழ்ச்சியுடன் கழிப்பதற்கான மேடை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இராமலிங்க விலாசம் சுவரோவியங்கள்

கி.பி. 1713-ல் சேது மன்னராக ஆட்சி பீடம் ஏறியவர் முத்து விஜய ரெகுநாத சேதுபதி ஆவார். இயல்பாகவே கலை உள்ளம் கொண்ட இந்த மன்னர் அவரது ஆட்சிக்காலத்தில் மேற்கொண்ட அரிய பணிகளில் இராமலிங்க விலாசம் அரண்மனையை வண்ண ஒவியங்களால் அலங்கரிக்கச் செய்தது குறிப்பிடத்தக்கது ஆகும். அரசியல், சமூக, கல்வித் துறைகளில் பல நூற்றாண்டுகளாகப் பின்னடைவு பெற்றிருந்த மறவர் சீமை மக்களுக்கு இந்த வண்ண ஒவியங்கள் மகத்தான கற்பனையையும், எழுச்சியையும் ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த ஒவியங்களைச் சேதுபதி மன்னர் இராமலிங்க விலாசம் அரண்மனைச் சுவர்களிலும் தூண்களுக்கு இடையில் உள்ள வில் வளைவுகளிலும் தீட்டுமாறு செய்துள்ளார்.

மகா மண்டபம் போன்ற இந்த முன் மண்டபத்தில் நுழைந்தவுடன் இடதுபுறம் கிழக்குச் சுவற்றில் ஒரு போர்க்களக் காட்சி தீட்டப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மராத்தியப் படைகளுக்கும் சேதுபதி மன்னரது மறவர் படைகளுக்கும் இடையே அறந்தாங்கிக் கோட்டைக்கு வடக்கே நிகழ்ந்த போரின் காட்சியைச் சித்தரிப்பதாக இந்த ஓவியம் அமைந்துள்ளது. வலது புறம் கிழக்குச் சுவற்றில் முத்து விஜய ரெகுநாத சேதுபதியின் உருவமும் அதனை அடுத்து வடக்குச் சுவற்றில் வைணவக் கடவுளான பெருமாளின் பல கோலங்கள் தீட்டப்பட்டுள்ளன. இவைகளுக்கு எதிரே தெற்குச் சுவற்றில் சைவ சமயக் காட்சிகள் தீட்டப்பட்டுள்ளன. திருச்சி உச்சிப்