பக்கம்:சேதுபதி மன்னர் வரலாறு.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

92

சேதுபதி மன்னர் வரலாறு

சீமைகளிலும் ஏற்பட்ட மக்கள் கிளர்ச்சிகளினால் ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனி மிகவும் பாதிப்பிற்கு உள்ளானது. இதனால் புரட்சிக்காரர்களது இருப்பிடமாக அமைந்து ஆங்கிலேயருக்கு எதிரான அரண்களாக விளங்கிய கோட்டைகள் அனைத்தையும் கி.பி. 1803 - 1804 ஆகிய வருடங்களில் இடித்துத் தகர்த்து விடுமாறு ஆங்கிலேயரது தலைமை உத்தரவிட்டது. இதன் விளைவாக இராமநாதபுரம் கோட்டையின் மதில்களும், கொத்தளங்களும், வாசலும் இடித்து அகற்றப்பட்டன. இந்த இடிபாடுகளிலிருந்து தப்பித்து இன்றும் இராமநாதபுரம் வரலாற்றினை உணர்த்தி வரும் சின்னமாக இந்த மூலைக் கொத்தளம் அமைந்து விளங்கி வருகிறது.