பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாங்கூர்ப் புருடோத்தமன் 81 ‘விரிவுபடுத்தல் என்பது. நாசம் என்ற பொருளைத் தருகின்ற 'ஸ்ரு' என்ற தாதுவினின்றும் பிறந்த ரீ என்ற சொல்லுக்கு 'நாசப்படுத்துதல் அதாவது போக்குதல் என்பது பொருள். விஸ்தாரம்’ என்ற பொருளைத் தருகின்ற ஸ்ரு என்ற தாதுவினின்றும் பிறந்த ரீ என்ற சொல்லுக்கு 'விஸ்தரிக்கின்றாள்' என்பது பொருள். ஸ்ருணாதி நாசப்படுத்துகின்றாள் - அதாவது ஈசுவரனுடைய கிருபை முதலான குணங்களையும் சேதநனுடைய தீமனத்தையும் போக்குகின்றாள். அதாவது ஈசுவரனுடைய கிருபை' முதலான குணங்களையும், சேதநனுடைய ருசி முதலானவற்றையும் ‘விரிவுபடுத்துகின்றாள் என்றபடி. இன்னும் எஞ்சியுள்ள இரண்டு பொருள்களையும் காண்போம். ‘கேட்டல் என்ற பொருளைத் தருகின்ற 'ஸ்ரு என்ற தாதுவினின்றும் பிறக்கும் ரீ என்ற சொல்லுக்குக் கேட்கின்றாள்' என்பதும் ‘கேட்பிக்கின்றாள்' என்பதும் பொருள், இவ்விருவகைப் பொருள்களுள் கேட்பிக்கின்றாள் என்ற பொருளே இவ்விடத்திற்கு வேண்டுவது. ஸ்ருணோதி - கேட்கின்றாள், ஸ்ராவயதி' - கேட்பிக்கின்றாள். ரீயாகிய எம்பெருமாட்டி எம்பெருமானையும் சேதநனையும் தன் உபதேசத்தாலே திருத்துவாள். உபதேசத்தாலே இருவருடையவும் கர்மபார தந்திரியம் குலையும்.’ (பாரத தந்திரியம் - பரனுக்கு வசப்பட்டிருத்தல்) என்பது ரீவசன பூஷண வாக்கியம். சேதநனுடைய கர்ம பாரதந்திரியம் வேறு ஈசுவரனுடைய கர்ம பாரதந்திரியம் வேறு. தாயாம் தன்மையால் வந்த சம்பந்தத்தால் மக்களுக்கு நம்பிக்கைக்குரியவளாய் மக்களுக்கு நெஞ்சு இளகி இறைவனைப் பற்றுவதில் ருசி உண்டாகுமாறு செய்தல், மனைவி என்ற சம்பந்தத்தாலே இறைவனால் விரும்பப்படுபவளான இவள் இறைவனுக்கு நெஞ்சு இளகி இவர்களை அங்கீகரிப்பதில் ருசி உண்டாகுமாறு செய்தல்; இதனால் நல்வினை தீவினைகளின் வசத்திலே இழுப்புண்டு பகவானிடத்திலே ருசி இல்லாதவனாகத் திரிகின்ற சேதநனுடைய கர்ம பாரதந்திரியம் குலையும், சேதநன் செய்த பாவங்களை முக்கியமானவையாக்கி அவற்றிற்கு ஈடாகவே செய்பவன் என்று இச்சேதநனைக் காப்பாற்றுவதில் ருசி" இல்லாமலிருக்கின்ற ஈசவரனுடைய கர்ம பாரதந்திரியமும் குலைந்துவிடும். சேதநன் கர்மங்கட்குப் பரதந்திரப்பட்டிருத்தல் அநாதியான பிரகிருதியின் சம்பந்தத்தின் காரியமான அறிவின்மை 2. ரீ வசன பூஷ - 13