பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி காரணமாக வந்ததாகும். இறைவன் கர்மங்கட்குப் பரதந்திரப் பட்டிருத்தல் வேறு ஒன்றால் தடைசெய்யப்படாத தன் சுவாதந்திரியத்தின் காரியமான தன் நினைவின் காரணத்தாலாகும். தன் உபதேசத்தாலும் திருந்தாவிடில் வேறு வகையாகவும் திருத்த முயல்வாள் எம்பெருமாட்டி. இதனை, உபதேசத்தாலே மீளாதபோது சேதநனை அருளாலே திருத்தும், ஈசுவரனை அழகலே திருத்தும்.’ என்று விளக்குவர் பிள்ளை உலக ஆசிரியர். இந்த எண்ணங்கள் நம் மனத்தில் குமிழியிட்ட வண்ணம் திருவண்புருடோத்தமம் என்ற திவ்விய தேசத்தை நோக்கி வருகின்றோம். இத்திருத்தலம் அண்ணன் கோயிலிலிருந்து சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவிலும், சீகாழி இருப்பூர்தி நிலையத்தினின்றும், தென் கிழக்குத் திசையில் சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. வண்டியில் வந்து கொண்டிருக்கும் போதே ஊர்ச் சூழ்நிலை நம் கண்வட்டத்தில் படுகின்றது. திருமங்கையாழ்வார் தம் பாசுரங்களில் குறிப்பிட்டிருக்கும் சூழ்நிலையையும் சிந்திக்கின்றோம். பெரும்பாலும் பாசுரங்களின் முன்னிரண்டடிகளில் எம்பெருமான் பற்றிய செய்திகளும், பின்னிரண்டடிகளில் நாங்கூரின் நீர்வளம், நிலவளம், சோலைவாய்ப்பு இவை பற்றிய செய்திகளும் அடங்கியுள்ளன. திருநாங்கூர் சோலைகளால் சூழப்பெற்ற இடம். பலா மரங்களின் வரிசைகளும், செண்பக மரங்களின் கூட்டமும் நிறைந்துள்ளன. இச்சோலைகளில், குருக்கத்திச் செடிகளும், மாமரங்களும் வாழை மரங்களும் செறிந்துள்ளன (1). சோலைகளில் கூத்தும் பாட்டும் நடைபெற்ற வண்ணம் உள்ளது. மேக முழக்கம் கேட்கப்படுங்கால் மயில்கள் தம் தோகைகளை விரித்துக் கூத்தாடுகின்றன; மயில்களின் நடனத்திற்கேற்ப வண்டுகள் இசையொலியை எழுப்புகின்றன (3). பல இடங்களில் கருப்பஞ் சோலைகள் காணப்பெறுகின்றன; எம்மருங்கும் கழனிகளில் செந்நெற் பயிர்கள் ஓங்கி வளர்ந்துள்ளன. நடைபாதைகளின் அருகிலுள்ள பொய்கைகள் சோலைகள் சூழ்ந்து காணப்பெறுகின்றன (4). திருநாங்கூருக்கும் ஊரைச் சூழ்ந்துள்ள வயலுக்கும் வேறுபாடு காணமுடியாத நிலை. வயலில் வளர்ந்துள்ள கோங்குமரங்களின் அரும்புகளை நோக்கின் அவை அவ்வூர்ப் பெண்களின் 3. ரீவசன பூஷ - 14