பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி சாய்ந்த திருவரங்கம் தண்வேங் கடம்குடந்தை ஏய்ந்த திருமா லிருஞ்சோலை-பூந்துவரை வண்புரு டோத்தமாம் வானவர்க்கும் வானவனாம் ஒண்புரு டோத்தமன்தன் ஊர்’ (சாய்ந்த . பள்ளி கொண்டிருக்கின்ற; தண் - குளிர்ந்த, ஏய்ந்த திருவுள்ளத்துக்குப்) பொருந்திய, பூ - அழகிய துவரை - துவாரகை) என்பது பாசுரம். வானவர்க்கும் வானவனாகிய அழகிய புருடோத்தமன் என்னும் திருமாலின் திருப்பதி திருவரங்கம், திருவேங்கடம், திருக்குடந்தை, திருமாலிருஞ்சோலை, துவாரகை, திருவண்புருடோத்தமம் என்பவைகளாகும் என்கின்றார் அய்யங்கார். ஈண்டு அர்ச்சை எம்பெருமான்களின் திருத்தலங் களை எடுத்துக்காட்டி தேவாதி தேவனான பரத்துவ எம்பெருமானே இத்திருத்தலங்களில் அர்ச்சாவதார எம்பெருமான் களாக எழுந்தருளியிருக்கின்றான் என்பதைப் பெற வைக்கின்றார். புருடோத்தமன் பக்தர்களும் முக்தர்களும் நித்தியர்களுமாகிய புருடர்கள் யாவரினும் சிறந்தவன் என்று பொருள்படும் சொல்லாகும். மனநிறைவு பெற்ற நிலையில் வைகுந்த விண்ணகரம் என்ற திருத்தலத்தைச் சேவிப்பதற்காகப் புறப்படுகின்றோம். இத்தலத்தில் கைங்கரியம் செய்யும் அர்ச்சகரே வைகுந்த விண்ணகரத்திலும் கைங்கரியம் புரிபவராதலால் அவரே நம்மை அத்தலத்திற்கு இட்டுச் செல்கின்றார். 5. நூற். திரு. அந், 34