பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. நாங்கூர் வைகுந்த நாதன் வைகுந்த விண்ணகரத்திற்கு வந்ததும் வைகுந்தமாகிய பரமபதத்தின் நினைவு வருகின்றது. வைகுந்தத்தில் இருப்பது போன்ற எண்ணங்கள் நம்மனத்தில் அலையிடுகின்றன. வைகுந்தத்தில் சீவான்மா பெறும் ஆனந்தம் அளவிறந்து ஒப்பற்றதாக இருக்கும் பான்மையது. இங்குத் திவ்விய கற்பகச் சோலைகள், நானாவித மலர்கள் நிறைந்த திவ்விய பூங்காக்கள், திவ்விய இளமரக்காக்கள், திவ்விய செய்குன்றங்கள், நீராடும் திவ்விய தடாகங்கள் முதலியவை நிறைந்திருக்கும். இங்கு மிகவும் இடம் அகன்ற நிரதிசய ஆனந்த மயமான திருமாமணி மண்டபம் ஒன்றுண்டு. உபய விபூதியிலுள்ளவர்களும் ஒரு மூலையில் அடங்கும்படியான விசாலமானது. இங்குள்ள பொருள்கள் யாவும் சுத்த சத்துவத்தாலானவை. இங்குக் காலம் நடையாடாது; காலை, மாலை, பகல், இரவு, இன்று, நேற்று என்ற நிலைகள் இங்கு இல்லை. முன், பின் என்ற நிலை இங்கு உண்டு. வீடுபேறு அடைவதற்கேற்ற உபாயங்களைக் கையாண்டு அவன் திருவருளைப் பெற்ற முமுட்சுகள்தாம் இந்த நீள் விசும்பினை அடைதல் முடியும். இவர்கள் இப்பூவுலகிற்குத் திரும்பி வருதல் இல்லை. பிரளய காலத்தில் இவர்கட்கு அழிவு இல்லை. இறைவனின் திருவுள்ளப்படி எந்த உருவத்தையும் இவர்கள் மேற்கொள்வர். பரமபதநாதன் வீற்றிருக்கும் இடம் இத்திருமாமணி மண்டபமாகும். இவன் வீற்றிருக்கும் சீரிய சிங்காதனம் அற்புதமான கோப்புடையது. பன்னிரண்டு இதழ்களையுடைய நானா சக்தி மயமான திவ்விய பொற்றாமரைப் பூவின் மீது விசித்திரமான கட்டிலைக் கொண்டது. இந்தக் கட்டிலின்மீது பல்லாயிரம் சந்திரர்களை உருக்கி வார்த்தாற் போல குளிர்ந்த தன்மையை உடைத்தான திருமேனியையுடையனாய் கல்யாண குணங்கட்கு