பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி அந்தமில்லாமையினால் அநந்தன் என்ற திருநாமமுடையவனாய், எல்லாவித அடிமைத் தொழில் புரிபவர்கட்கெல்லாம் உபமான நிலமாயிருத்தலால் சேஷன் என்னும் திருநாமமுடையவனாகிய திருஅனந்தாழ்வானாகிய படுக்கையில் வெள்ளிமலையின் உச்சியில் பல்லாயிரம் பகலவர்கள் உதித்தாற் போல் இருக்கும் ஆயிரம் பணாமுடி மண்டலமாகிய சோதி மண்டலத்தின் நடுவில் வீற்றிருப்பவன். அருள் தேவியான பெரிய பிராட்டியார் வலப்பக்கத்திலும், பொறை தேவியான பூமிப் பிராட்டியாரும் ஆனந்த தேவியான நீளாப் பிராட்டியாரும் இடப்பக்கத்திலும் இருப்பர். இவனை அனந்தன், கருடன், விஷ்வச் சேனர் முதலான நித்திய சூரிகளும், இவ்வுலகத் தளைகளினின்றும் விடுபட்ட முக்தரும் அநுபவித்தற்கு உரியனாய் இருப்பன். நாம் இந்தக் குழுவில் ஒருவனாய் இருப்பது போன்ற ஒருவித பிரமையை அடைகின்றோம். இந்த எண்ணங்கள் நம் மனத்தில் குமிழியிட்ட வண்ணம் வைகுந்த விண்ணகரம் என்ற திவ்விய தேசத்திற்கு வருகின்றோம். இத்திருத்தலமும் சீகாழி இருப்பூர்தி நிலையத்திலிருந்து கிழக்கே சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. எம்பெருமான் வைகுந்தத்தில் எழுந்தருளியிருப்பது போலவே இத்திருத்தலத்திலும் வீற்றிருந்த திருக்கோலமாகச் சேவை சாதித்தலால் இத்திருத்தலம் வைகுந்த விண்ணகரம் என்று திருநாமம் பெற்றதென்று அறிகின்றோம். எம்பெருமான் திருநாட்டில் எழுந்தருளியிருப்பதை, வீற்றிருந்து ஏழுலகும் தனிக்கோல் செல்ல விவில்சீர் ஆற்றல்மிக் காளும் அம்மானை (ஏழ்உலகு ஏழுவுலகங்களில்; தனிக்கோல் - செங்கோல்; செல்ல - நடக்கும்படி, வீவுஇல் - முடிவில்லாத சீர் - கல்யாண குணங்கள்; ஆற்றல் - ஆறுதல், அதாவது, சாந்தி.) என்று காட்டுவார் நம்மாழ்வார். திருவனந்தாழ்வான் மீது பெரிய பிராட்டியோடு வீற்றிருந்து உலகமெல்லாம் செங்கோல் செலுத்துகின்றான்; அங்ங்னம் செங்கோல் செலுத்துவதற்கு ஞானம், சக்தி முதலிய திருக்குணங்கள் நிரம்பப் பெற்றவனாகத் திகழ்கின்றான்; தன்னுடைய தலைமையினால் கொடுங்கோன்மை காட்டாமல் சாந்தியோடு இருந்து ஆள்கின்றான். பரமபதத்தில் எம்பெருமானின் இருப்பை, 1. திருவாய் 4.5:1