பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாங்கூர் வைகுந்தநாதன் 89 பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும் அங்காதும் சோராமே ஆள்கின்ற எம்பெருமான்.” (பொங்கு - அலை எறியும்; ஒதம் - கடல்; புவனி . பூ மண்டலம், விண்உலகு - பரமபதம், ஆதும் - சிறிதும்; சோராமே - குறைவு படாமல்; ஆள்கின்ற - ஆட்சி புரியும்) என்று காட்டுவர் பெரியாழ்வார் பெண்கொடி. கடல் சூழ்ந்த மண்ணுலகும் விண்ணுலகும் ஆகிய இரண்டு விபூதிகளையும் சிறிதும் குறைவின்றி ஆண்டு வருகின்றான் என்கின்றார் அன்னையார். வைகுந்தநாதனின் இருப்பு வேறோர் இடத்திலும் காட்டப்பெற்றுள்ளது; ஆண்டு கண்டு கொள்க. இவன் தெற்கு நோக்கிய திருமுக மண்டலம் கொண்டு வீற்றிருந்த திருக்கோலத்தில் சேவை சாதிப்பதாகக் கொள்வது ஐதிகம். இத்திருத்தலத்து எம்பெருமானைத் திருமங்கையாழ்வார் மட்டிலும் ஒரே ஒரு திருமொழியால் மங்களாசாசனம் செய்துள்ளார். இந்தப் பாசுரங்களில் ஆழங்கால்படுகின்றோம். முதலில் ஆழ்வார் காட்டும் தலத்துச் சூழ்நிலையில் நம் கண்வட்டம் செல்லுகின்றது. பெரும்பாலும் பாசுரங்களின் பிற்பகுதியில் தல வருணனை அமைகின்றது. எம்பெருமான் திருவுள்ளம் உவந்து எழுந்தருளியிருப்பதற்குப் பாங்கான தலம் என்பதை முதலிக்கின்றார் ஆழ்வார். சலங்கொண்டு மலர்சொறியும் மல்லிகையொண்செருந்தி சண்பகங்கள் மணநாறும் வண்பொழிலி நூடே வலங்கொண்டு கயலோடி விளையாடு நாங்கூர் வைகுந்த விண்ணகரம். (சலம்கொண்ட - நீரைப் பருகி, ஒண் - அழகிய செருந்தி - சுரபுன்னை; வண் - அழகிய கயல் - மீன்) என்கின்றார். மல்லிகை, சுரபுன்னை, சண்பகம் முதலியவை எங்கும் அடர்ந்திருப்பதனால் அவற்றின் நறுமணம் நிறைந்துள்ளது. நீரை விட்டுப் பிரிந்தால் ஒரு நொடிப்பொழுதும் வாழமாட்டாத மீன்களும் நீர் உறுத்துவதாகக் கொண்டு அதைவிட்டு நீங்கி அதனைவிட நிலம் மிதிதானே நன்றாயிருக்கின்ற சோலையிலே வந்து சேர்ந்து அச்சோலையின் நறுமணத்தை முகர்ந்துகொண்டு துள்ளி விளையாடுகின்றனவாம். பார்த்த விட மெங்கும் பெரிய செந்நெற்பயிர்களும், இளந்தென்னை மரங்களும், வெற்றிலைக் 2. நாச். திரு. 11.3 3. வடநாட்டுத் திருப்பதிகள் - வைகுண்ட நாதன் பக். 161 4. பெரி. திரு. 3.91