பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி (56007th13,600m(301 (Auspicious Qualities) 9 colouré, é, Qāstgoró, கொண்டு அவன் சந்நிதியிலேயே உள்ள புளியாழ்வாரின் கீழ் கிடக்கின்றது. இவ்வாறு உலகத்துச் சித்து அல்லது ஆன்மாக்களின் நிலையினையும் இதற்கு மாறான தமது ஆன்மாவின் நிலையினையும் இதற்கு மாறான தமது ஆன்மாவின் நிலையினையும் உணர்த்துகின்றார் சடகோபர். இதனால் மாறன் என்ற திருநாமத்தையும் பெறுகின்றார். இந்த எண்ணங்கள் நம் சிந்தையில் குமிழியிட்ட வண்ணம் மணிமாடக் கோயிலை நோக்கி வருகின்றோம். நாங்கூர் என்பது ஒரு பெரிய இடம். “நாங்கூர் நாலாயிரம்” என்று வழங்கி வரும் சொற்றொடர்படி நாலாயிரம் வைணவக் குடிகள் வாழ்ந்த இடமாதலால் அவரவர்கட்கு அணித்தாக இருக்குமாறு எம்பெருமான் பதினொரு இடங்களில் சந்நிதி பண்ணலாயிற்று. திருக்கோயிலை நோக்கி வரும்போதே திருமங்கையாழ்வார் இத்திருக்கோயில் எம்பெருமானை மங்களா சாசனம் செய்த பாசுரங்களில் ஆழங்கால் பட்ட வண்ணம் வருகின்றோம். முதலில் திருமங்கையாழ்வார் காட்டும் திருத்தலச் சூழ்நிலையைச் சிந்திக்கின்றோம். ஆழ்வார் இதனை “வண்டார் பொழில் சூழ்ந்து அழகாய நாங்கூர்” என்று சிறப்பிப்பர். மேலும், “எத்திசையும் கந்தாரம் அம்தேன் இசைபாட மாடே களிவண்டு மிழற்ற நிழல்துதைந்து மந்தாரம் நின்று மணம்மல்கும் நாங்கூர்” (கந்தாரம் - தேவ காந்தாரி இராகம்; களிவண்டு . ஒருவகைச் சாதி வண்டு; மிழற்ற ஒலிக்க; மந்தாரம் - பாரிஜாத மரங்கள்; துதைந்து நெருங்கி; மல்கும் - நிறைந்திருக்கும்) என்ற பாசுரப் பகுதியில் ஓரளவு நன்கு இச்சூழ்நிலை காட்டப்பெறுகின்றது. எல்லாவிடங்களிலும் அழகிய தேன் சாதி வண்டுகள் தேவகாந்தாரி இராகம் பாடுகின்றன; களிவண்டு சாதியிற் பிறந்த வண்டுகள் பக்கங்களில் ஆலாபனை பண்ணுகின்றன; பாரிஜாத மரங்கள் நெருங்கி நின்று நிழல் தருவதுடன் நறுமணத்தையும் 5. சடகோபர் - தாயின் கருவறையிலருந்து வெளிவரும் - குழந்தை முதலில் நுகர்வது தன் மூக்கினால் உலகக் காற்றை இக்காற்றுக்குச் சடம் என்பது பெயர். இக்காற்று குழந்தையின் உடலில் புகுந்ததும் உலகில் நிலவும் அஞ்ஞானததினின்றும் உடலால் ஏற்படும் சுகதுக்கங்கட்கும் காரணமாகின்றது. இந்தக் காற்று தம் மூக்கில் நுழையாத படி ஊம் என்ற ஊங்காரத்தால் அதட்டி வெருட்டினதால் இவர் சடகோபர்’ என்ற பெயர் பெற்றார் என்பர். இவரும் தம் பிரபந்தங்களெங்கும் தம்மைச் சடகோபர் என்றே குறிப்பிடுவர். 6. பெரி. திரு. 3.8:10 7. மேலது. 3.8:1