பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாங்கூர் நந்தா விளக்கு 97 நல்குகின்றன என்று கூறுகின்றார் ஆழ்வார். வீரசிங்கங்களால் கொல்லப்பெற்ற யானைகளின் கொம்புகளையும், அகில் மரங்களையும், அழகிய முத்துகளையும், வெளுத்த சாமரங்களையும், மலையில் விளையக்கூடிய பல்வேறு பண்டங்களையும் காவிரி நதி அலைகளால் தள்ளிக்கொண்டு வருகின்றது. திருநாங்கூரில் காவிரியாறு நேரே பெருகுவதில்லையாயினும் காவிரிக் கால்களின் பெருக்கு சுற்றுப் பகுதிகளில் உள்ளமை பற்றி பொன்னி. திரையுந்து நாங்கூர் என்று கூறப்பெற்று இருப்பது ஈண்டு அறியத்தக்கது (3). மரங்களின் தளிர்கள் அசைந்தாடுவதால் அவற்றின் அருகேயுள்ள பூங்கொடிகளின் திரள் ஆடுகின்றது: குயில்கள் கூவுகின்றன; மேகங்கள் உலவும் சோலைகளில் மயில்கள் நடனமாடுகின்றன (5) வயல்களில் எருமைகளின் இருப்பை, .. ஒங்குபைந்தாள் கண்ஆர் கரும்பின் கழைதின்று வைகி கழுநீரில் மூழ்கி செழுநீர்த் தடத்து மண்ஏந்து இளமேதிகள் வைகும் நாங்கூர்” (ஒங்கு - உயர்ந்து, பைந்தாள் - பசுந் கால்கள்; கண்ஆர் - கணுக்கள் நிரம்பிய கழை - கரும்பு வைகி - தாமதித்து நடந்து தடத்து தடாகத்தில், மண்ஏந்து - கொம்புகளில் மண்ணைத் தாங்கி, மேதி . எருமைகள்) என்று காட்டுவார் ஆழ்வார். வயல்களில் இளைய எருமைகள் கரும்புத் தலையாடியை மேய்ந்து, அளவுமீறி தின்னதாலே, நகர்ந்து செல்லமாட்டாமல் இருந்த இடத்திலேயே இடம் வலம் கொண்டு அசைபோடுகின்றன; பிறகு மெதுவாக நடந்து சென்று செங்கழுநீர்ப் பூக்கள் நிரம்பியிருக்கப் பெற்ற அழகிய நீர் நிரம்பிய தடாகத்திலே மூழ்குகின்றன; குட்டையின் சேற்றிலே கொம்புகளைக் குத்தி மண்ணுருண்டையைப் பெயர்த்தெடுத்துத் தாங்கிக்கொண்டு கிளம்பி, பின்னர்க் கரையேறவும் முடியாதபடி அவ்விடத்திலேயே தாமதித்துக் கிடக்கின்றன. இப்பாசுரத்தைப் பிள்ளை விழுப்பரையரும் ஆப்பானும் கூடி அநுசந்தித்துப் பொருள் நோக்குங்கால் மூன்றாம் அடியில் ‘வைகி என்று ஒருமுறை வந்துள்ளது. நான்காம் அடியிலும் வைகு என்று மீண்டும் வந்துள்ளது. இப்படித் திரும்பவும் கூறுவதற்குப் பொருளென்ன? என்று ஐயுற்றுப் பட்டரைப் பணிந்து கேட்க, "அவ்விடத்து எருமைகளின் செளகுமார்யம் (இளமைத் தன்மை) விளக்கப்பட்டதாகின்றது, முரட்டெருமைகளாயிருந்தால் பதறிப் பதறி நடக்கும்; க.குமாரமான எருமைகளாகையாலே வைகி வைகிக் கிடக்கிறபடி” என்று அருளிச் செய்தாராம். வைகுதல் - விளம்பித்தல்; தாமதமாக இருத்தல் (6). அன்னப் பறவைகள் தாமரைப் பூக்களில் 8. பெரி. திரு. 3.8:6