பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி தம்பதிகளாக இருந்துகொண்டு விளையாடுங்கால் அம்மலர்கள் துகைக்கப் பெற்று அவற்றினின்றும் மதுவெள்ளம் பெருகிக் செங்கழுநீர் மடைகளிலும் ஓடிப் பாய்கின்றதாம். திரண்ட புண்டரீகங்களின் (தாமரைகளின்) நடுவே அன்னங்கள் துகைக்க நடுவு நிற்கின்ற செங்கழுநீரானது மது வெள்ளமிடா நிற்கும் என்ற பெரிய வாச்சான் பிள்ளையின் வியாக்கியானத்திற்கிணங்க வேறு வகையாகவும் பொருளுரைத்துக் கொள்ளலாம் (9). அடுத்து, ஆழ்வார் திருநாங்கூர் நகரச் சிறப்பு பற்றியும் பாசுரங்களில் குறிப்பிடுகின்றார். திருநாங்கூரில் மாட மாளிகைகள் விண்ணளவும் ஓங்கியிருக்கின்றன; அவற்றில் புறாக்கள் கொடுங்கையின் மேலுள்ள, மெல்லிய பேடைகளுடன் உல்லாசமாகக் கலவி செய்து மகிழ்கின்றன (2). இவ்வூரிலுள்ள வைதிக அந்தணர்கள் கார்ஹபத்தியம், ஆகவநீயம், தட்சிணாக்கினி என்ற முக்திக்களை வளர்த்து, இருக்கு, யஜூர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களை ஓதி, பிரம்ம வேள்வி, தேவ வேள்வி, பூத வேள்வி, பித்ரு வேள்வி, மநுஷ்ய வேள்வி என்ற ஐம்பெரும் வேள்விகளை அநுட்டிப்பவர்கள்; சிட்சை, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், சோதிடம், கல்பம் என்ற வேதாங்கங்கள் ஆறையும்" பயின்றவர்கள், நிஷாதம், ரிஷபம், காந்தாரம், ஷட்ஜம், மத்யமம், தைவதம், பஞ்சமம் என்ற ஏழு ஸ்வரங்களையும்' அறிந்தவர்கள் (4), இங்குள்ள வைதிக அந்தணர்கள் அல்லும் பகலும் மறையோதிக் கொண்டே இருப்பர். அவர்கள் வீட்டு மகளிரும் விடாமல் காதில் பட்ட உறைப்பின் மிகுதியால் மறை வாக்கியங்களை விடாமல் சொல்லுகின்றனர்; அவர்கள் வீட்டு மகளிரின் வாயிலும் வேதவொலி மலியப்பெற்றது இத்திருத்தலமாகும் (8). 9. பிரம்ம வேள்வியாவது - நாடோறும் வேதத்தில் ஒவ்வொரு பகுதியை ஒதுவது. தேவவேள்வியாவது - அக்நிஹோத்ரம் செய்வது. பூதவேள்வியாவது - பிராணிகட்குப் பலியிடுவது. பித்ருவேள்வியாவது - பித்ருக்கனனை உத்தேசித்துத் தர்ப்பணம் விடுவது. மதுஷ்யவேள்வியாவது - விருந்தினர்கட்கு உணவு முதலியன கொடுப்பது. 10. அச்சுக்கள், ஹல்லுக்கள் என்னும் எழுத்துகளை உச்சரிக்க வேண்டிய முறைகள் சிட்சையில் நுவலப்பெறும். ப்ரக்ருதி ப்ரத்யயங்களின் பாகுபாடும் அவற்றின் அர்த்த விவேகமும் வியாகரணத்திலும் நிருக்தத்திலும் அறுதியிடப் பெறும். காயத்ரி த்ரிஷ்டுப், ஜகதீ இவை போன்ற சாந்தோ பேதங்கள் சந்தஸில் கூறப் பெறும். வேதோக்த கருமங்களைக் காலமறிந்து அநுட்டிக்க வேண்டுகையாலே அக்காலங்களை அறிவிப்பது சோதிடம் ஆச்வலாயர், ஆபஸ்தம்பர் முதலிய பெருமுனிவர்களால் செய்யப்பெற்ற கல்பங்களில் வைதிக கருமங்களை அநுட்டிக்க வேண்டிய முறைமைகள் விளக்கப்பெறும். 11. மயிலின் கூவுதல் ஷட்ஜ ஸ்வரம். மாடுகளின் கூவுதல் ரிஷப ஸ்வரம். ஆடுகளின் கூவுதல் காந்தார ஸ்வரம். அன்றில் பறவைகளின் கூவுதல் மதியம் ஸ்வரம். குயிலின் கூவுதல் பஞ்சம ஸ்வரம். குதிரையின் கனைத்தல தைவத ஸ்வரம். யானையின் முழக்கம் நிஷாத ஸ்வரம். இவை பற்றி நாரதர் சொல்லியுள்ளார்.