பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாங்கூர் நந்தா விளக்கு 99 திருநாங்கூரின் மாட மாளிகைகளில் கொடிகள் நாட்டப் பெற்றுள்ளன (5). இக்கொடிகள் சந்திர மண்டலத்தை எட்டியிருக்கும்; சந்திரன் சஞ்சரிக்கும்போது, இக்கொடிகளில் தவக்குண்டு அப்பால் செல்ல முடியாதபடி அவற்றோடு விளையாடுகின்றான். இப்படிப்பட்ட மாளிகைகள் நிறைந்த வீதிகளில் குறத்திகள் தங்கட்கு விளையாட்டாகக் கிடைக்கின்ற நன்முத்துகளைக் கூடை கூடையாகக் கொண்டு நாழி தெல்லுக்கு விற்பனை செய்கின்றார்களாம். திருநாங்கூராரிடத்தும் முத்துகள் ஏராளமாக இருக்கையாலே, அவர்கள் வந்து அவற்றைக் கொள்வதில்லை; குறத்திகள் தாங்களே சென்று, வேண்டாமென்று கதவடைத்துத் தள்ளினாலும் நாழி நெல்லுக்கு நானாழி முத்து கொள்ளுங்கள் என்று வலுக் கட்டாயமாகக் கொடுக்குமாறு கூறுகின்றமை தோன்றும். இந்தச் சந்தை நிலைவரத்தால் ஊரின் செல்வச் செழிப்பைச் சொன்னவாறாம் (7). அடுத்து, ஆழ்வார் எம்பெருமான் பெருமையில் ஆழங்கால் படுவதையும் காண்போம். தேவர்கள் இத்தலத்தில் குழுமி எம்பெருமானை, “நந்தா விளக்கே! அளத்தற் கரியாய்! நர நாரணனே! கருமாமுகில் போன்ற எந்தாய்!” என்று பரவுகின்றனர். ஆழ்வார் இத்தலத்து எம்பெருமானை ‘நந்தாவிளக்கே என்று குறிப்பிட்டமையால் எம்பெருமானின் திருநாமமும் 'நந்தாவிளக்கு என்று வழங்கலாயிற்று. “சுயம்பிரகாசமான ஞானத்தை ஸ்வரூபமாக உடையவனே!” என்பது இதன் பொருளாகும் (1). இத்திருக்கோயிலில் சந்நிதி பண்ணியிருப்பவன் ஆதிமூலமே என்று கூவி அழைத்த முதலையின் வாயில் அகப்பட்டுக்கொண்டு திண்டாடின கசேந்திரன் என்ற யானையின் துயர் துடைத்தவன் (2). யானையின் துயர் தீர்த்த எம்பெருமானுக்கு அண்டினவர்களின் விரோதிகளைக் களைந் தொழிந்தால் அம்மகிழ்ச்சிக்குப் போக்குவீடாகப் பெரிய பிராட்டி வெகுமானம் பண்ணுகின்றாள்; தனது திருமுலைத் தடத்தாலே அவனை அமுக்கிக் கட்டித் தழுவுகின்றாள் (3). முன்பொரு காலத்தில் கருடப் பறவையின் மீது ஏறிக்கொண்டு எழுந்தருளி மாலி, சுமாலி முதலிய அரக்கர்கள் எட்டுத் திசைகளிலும் சிதறியோடவும் பலர் மாண்டொழியவும் கடல் கீழே இலங்கையை அழித்த பெருமான் (4)". பேய்ச்சியின் முலையிலுள்ள நஞ்சினை அவளுயிருடன் ஒக்க உண்டவன்; வத்ஸாசுரனை எறிதடியாகக் கொண்டு கபித்தாசுரன் மேல் கழற்றி யெறிந்து இருவரையும் ஒருங்கே முடித்தவன்; குருந்தமரத்தை ஒசித்த கோபாலன்; தடந்தாமரைப் பொய்கை புக்கு ஆயமங்கையருடன் 12. இச்செய்தி உத்தர இராமாயணத்தை அடியொற்றியது.