பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தெற்றியம்பலத்துச் செங்கண்மால் 105 யுடையது திருநாங்கூர் (3). அழகு பொருந்திய மலர்கள் மலிந்துள்ள சோலைகள் விண்ணை முட்டுமளவும் பரவியுள்ளன; அவை எழில் மதியை அசையவொட்டாமல் தடுத்து நிறுத்துகின்றன (4). நறுமணம் கமழ்கின்ற மலர்களையணிந்த கூந்தலையுடைய மகளிர் நீரில் படிந்து நீராடுகையில் தங்கள் கொங்கைத் தடங்களில் அணிந்திருந்த குங்குமக் குழம்புகளைத் தேய்த்துக் கழுவுவதனால் நீரோட்டம் செந்நிறம் அடைந்து வெண்மணல் நிலங்களில் தவழ்கின்றது (7). திருமணிக் கூடத்துத் திருமொழியில், கொவ்வைவாய் மகளிர் கொங்கைக் குங்குமம் தழுவிப் போந்த தெய்வநீர் கமழும் நாங்கூர்' (கொவ்வை - கொவ்வைக் கனி போன்ற) என்ற பாசுரத்தில் இதே கருத்தைக் கூறியிருப்பது ஈண்டு உளங்கொள்ளத்தக்கது. இனி, நகர்வளத்தைக் காண்போம். திருநாங்கூரிலுள்ள மணிமாடங்கள் மதி மண்டலத்தளவும் ஓங்கியுள்ளன (4). நகரில் வீதிதோறும் மலை மலையான மாடங்கள் வரிசை வரிசையாக இடைவிடாது ஒன்றோடொன்று சேர்ந்து நெருங்கியுள்ளன; இத்தகைய வீதிகளில் மதுர மொழிகளையுடைய மகளிர் தம் புருவ நெறிப்பினால் ஆடவர்களின் மனத்தைக் கவர்ந்து கொள்ளுகின்றனர் (5). மான்போலும் மென்நோக்கின் செய்ய வாயார் மரகதம்போல் மடக்கிளியைக் கைமேல் கொண்டு தேன்போலும் மென்மழலை பயிற்று (மான்போலும் - மானின் நோக்கு போன்ற செய்ய - சிவந்த மரகதம் - பச்சை நிறம், மடக்கிளி அழகிய கிளி) கின்றனர் (6), நாங்கூர்த் தெருக்கள் தோறும் நான்மறைகள், ஆறு அங்கங்கள், இதிகாச புராணங்கள் இவற்றின் முழக்கம் எங்கும் கேட்கப் பெறுகின்றன (8). நான்கு வேதங்களையும் விடாமல் ஓதிக் கொண்டுள்ளனர் அந்தணர்கள் (9). எம்பெருமானிடம் எங்ங்னம் ஆழ்வார் ஆழங்கால் படுகின்றார் என்பதையும் கண்டு மகிழ்வோம். திருநாங்கூரின் ஒரு பகுதியாகிய திருத்தெற்றியம்பலத்தில் எழுந்தருளியிருக்கும் செந்தாமரைக் கண்ணன் (செங்கண் மால்) மண்ணின் பாரம் நீங்க வடமதுரையில் பிறந்தவன், கஜேந்திரன் என்ற யானையைக் காத்தவன் (1). முன்பு கம்சனால் ஏவப் பெற்றுப் பேய் வடிவை மறைத்துத் தாய் வடிவு 5. பெரி. திரு. 4.5:2