பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருத்தெற்றியம்பலத்துச் செங்கண்மால் 107 பித்தியில் சார்ந்து கிடந்த பூமிப் பிராட்டியைக் கோட்டால் குத்தி எடுத்துத் தழுவிக்கொண்டு கோரப் பல்லின்மீது நிலை நிறுத்திக் கொண்ட கோமான் (8). எல்லா இடங்களையும் கடந்து எட்டுத் திக்குகளிலும் எல்லாப் பூமியிலும் அண்டத்திலும் பரவி கீழ் வெள்ளம் கிளம்பி கடல் பெருகும்படியான பிரளயப் பெருவெள்ளத்தை முன்பொருகால் திருவயிற்றில் அடக்கிக் கொண்டவன் (9). இத்தகைய பெரும்புகழ் வாய்ந்த எம்பெருமானே திருத்தெற்றியம்பலத்தில் அர்ச்சாவதாரமாக எழுந்தருளியிருப்பவன். இந்த அநுபவம் எழுந்த நிலையில் திருக்கோயிலில் நுழைகின்றோம். கிழக்கு நோக்கிய திருமுகமண்டலம் கொண்டு புயங்க சயனத்தில் சேவை சாதிக்கும் செங்கண் மாலைக் கண்டு சேவிக்கின்றோம். தாயாரின் திருநாமம், செங்கமலவல்லி நாச்சியார். இவரையும் வழிபட்டு இவர்தம் திருவருளுக்குப் பாத்திரர்களாகின்றோம். ஆழ்வார் பாசுரங்கள் பத்தையும் அவன் சந்நிதியில் மிடற்றொலி கொண்டு சேவித்து மனம் உருகுகின்றோம். இந்நிலையில் திவ்விய கவியின் திருப்பாடலும் நினைவிற்குவர அதனையும் ஓதி உளங்கரைகின்றோம். சென்றது.காலம் திரைநரை மூப்பு ஆணஇனி என்றுகொல் சாவுஅறியோம் என்நெஞ்சே! - கன்றால் உருத்தெற்றி அம்பலத்தை ஒர்விளவின் வீழ்த்தான் திருத்தெற்றி அம்பலத்தைச் சேர்." (காலம் - வாழ்நாள்; திரை - தோற்சுருக்கம், நரை - மயிர் வெளுத்தல்; மூப்பு - கிழத்தனம்; ஆன - தோன்றியுள்ளன; இனி - இனிமேல்; சாவு - மரணம்; ஒர்விளவின் - ஒரு விளாமரத்திலுள்ள அம்பலத்தை - அழகிய பழத்தை உருத்து - கோபித்து; கன்றால் இளங்கன்றைக் கொண்டு; எற்றி - வீசி எறிந்து வீழ்த்தான் - விழச் செய்தவனான திருமால், சேர் - இடைவிடாது தியாணி) என்பது பாடல். “பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி ஒவ்வொரு கரணமும் ஒடுங்கிக்கொண்டே வருகின்ற முதுமைப் பருவத்திலும் தமது நெஞ்சம் இறப்பின்றியே நின்றதென்று சிந்தனைச் சிறிதுமின்றி உலகப் பற்றுக்கொண்டு உழல்வது கண்டு ஆற்றாது அந்நெஞ்சை நோக்கி இனியாவது கன்றால் விளவெறிந்து இரண்டு அசுரர்களையும் ஒருசேர மாய்த்த எம்பெருமான் எழுந்தருளியிருக்கும் திவ்விய தேசத்தைச் சார்ந்து உய்வு பெறுவாய்” என்று உணர்த்துகின்றார் அய்யங்கார். மனநிறைவு பெற்று அடுத்திருக்கும் செம்பொன்செய் கோயிலை நோக்கிச் செல்லுகின்றோம். 8. நூற். திருப். அந் 36