பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 1() சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி போக்கியமாய்க்கொண்டு, இன்னருளாகிய பாலைச் சுரந்து காக்கின்றாள். அதன்றியும் தன்னைப் பற்றின சேதநனுக்கு ஒரு குறைவு நேரின், என்றும் தன்னை விட்டுப் பிரியாமல் கூடியிருக்கும் பிராட்டியாரையும் வேண்டாவென வெறுத்து அவனுக்குப் பல நன்மைகளைச் செய்வதற்குப் பசுவிற்குக் கன்றினிடமும், பகவானுக்குச் சேதநனிடமும் இருக்கும் அன்பே காரணமாகும். இதுவே வாத்சல்யம்' எனப்படும். சுவாமித்வம் என்பது, உடையனாயிருக்கும் இருப்பு. சேதநன் ஈசுவரனைக் கருதாமலும் நோக்காமலும் பாராமுக மாயிருக்கும் நிலையிலும், ஈசுவரன் இவனை விடாமல் நின்று, இவனுடைய சொரூபத்தையே நோக்கிக்கொண்டு போவதற்குக் காரணமாயுள்ள ஒரு தொடர்பே சுவாமித்துவமாகும். சேதநன் உலகப் பற்றிலேயே இச்சை வைத்து உழன்று திரிகின்றான். இங்ங்னம் சேதநன் பயனற்ற வழியில் தன் காலத்தைக் கடத்தினும், தன் உடைமையான இவனை அங்ங்னமே நலமற்ற வழியில் விட்டு விடுவதற்கு ஈசுவரனுடைய சுவாமித்துவமாகின்ற தொடர்பு இடந் தருதல் இல்லை. ஆதலின், அவன் தன் உடைமையான சேதநனை விடாது மறைந்திருந்து, அச்சேதநனுக்கு வெறுப்பு அற்றிருக்கும் நிலை தொடங்கி, கைங்கரியம் புரியும் நிலை ஈறாக உள்ள பல நன்மைகளையும் உண்டாக்குகின்றான். இதற்குக் காரணம் பகவானுக்கும் சேதநனுக்கும் உள்ள தொடர்பேயாகும். இந்த எண்ணங்கள் நம் சிந்தையில் குமிழியிட்ட வண்ணம் செம்பொன்செய் கோயிலை நோக்கி வருகின்றோம். இதுவும் சீகாழி இருப்பூர்தி நிலையத்திலிருந்து கீழ்த்திசையில் சுமார் எட்டுக் கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இந்தத் திருப்பதி திருநாங்கூரில நட்ட நடுவில் உள்ளது. இத்திருப்பதியை மங்களா சாசனம் செய்துள்ள திருமங்கையாழ்வார் பாசுரங்களிலும் நாங்கை நன்னடுவுள் செம்பொன்செய் கோயில் என்ற சொற்றொடரால் குறிப்பிடப் பெற்றுள்ளதைக் கண்டு மகிழலாம். இது தவிர ஆழ்வார் இத்திருமொழியையும் திருநாங்கூர்ப்பதிகங்கள் பதினொன்றின் நன்னடுவே அமைத்தருளின அழகும் போற்றத்தக்கது. 'நந்தாவிளக்கே (திருமொழி 3.8) என்று தொடங்கி “கவளயானை கொம்பொசித்த (திருமொழி 4.8) என்ற திருமொழியளவாகப் பதினொரு திருமொழிகள் திருநாங்கூர்த் திருப்பதிகளை மங்களா சாசனம் செய்வனவாகும். இவற்றுள் இத்திருமொழி நன்னடுவே அமைந்திருப்பதைக் காண்க. 1. பெரி. திரு. 4.3. இத்திருமொழியில் எல்லாப் பாசுரங்களிலும் இச்சொற்றொடர் வந்துள்ளது.