பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்பொன் செய்கோயில் பேரருளாளன் | | 1 இந்தத் திருப்பதியும் சோலைகள் நிறைந்த சூழ்நிலையில் அமைந்துள்து. பாசுரங்களில் இந்நிலை ஏனைய திருமொழிப் பாசுரங்கள் போல் விரிவாக விளக்கப் பெறாவிடினும் 'மலர்ப் பொழில்சூழ் நாங்கை என்று முதற் பாசுரத்திலும் (4-35), தேனமர் சோலை நாங்கை (4.3-10) என்று இறுதிப் பாசுரத்திலும் குறிப்பிடப் பெற்றுள்ளது. இங்ங்னமே திருநாங்கூர் மாட மாளிகை நிறைந்த ஊர் என்பதை ஒரே பாசுரம் சீரணி மாட நாங்கை (4.3-1) என்று குறிப்பிடுகின்றது. ஏனைய பாசுரங்களில் சிறப்புடை மறையோர், திடமொழி மறையோர், திசைமுகன் அனையோர், செல்வ நான்மறையோர், செஞ்சொல் நான்மறையோர், தெளிந்த நான்மறையோர் என்றும் வைதிக அந்தணர்களின் சிறப்பு பேசப் பெறுகின்றது. இத்திருத்தலத்து எம்பெருமானைத் திருமங்கையாழ்வார் ‘பேரருளாளன்' என்று திருநாமம் சூட்டுகின்றார். இவர் மலர் மகளோடும் மண் மகளோடும் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிப்பதையும் குறிப்பிடுகின்றார் (43.1). இங்கு நின்ற எம்பெருமான் “எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்த இமையோர் தலைவா' (திருவிருத்.1) என்று நம்மாழ்வார் கூறுகின்றபடியே பற்பல அவதாரங்களை எடுத்தாலும், இவை யாவும் நம் பிறவிபோல் வினை வயத்தவை அன்று அநுக்கிரக மடியாக உண்டானவை. ஆழ்வார் இவரை, பிறப்பொடும் மூப்பொன்று இல்லவன் தன்னைப் பேதியா இன்பவெள் ளத்தை இறப்பெதிர் காலக் கழிவுமா னானை ஏழிசை இன்சுவை தன்னை? (பேதியா - விகாரமடையாத) என்று குறிப்பிடுவர். இங்கு எழுந்தருளியிருக்கும் பிறப்பிலிப் பல் பிறவி எம்பெருமான் முப்பின்றி என்றும் இளையவனா யிருப்பவன்; பேதியா இன்ப வெள்ளத்தன், எக்காலத்தும் நிலை பெற்றிருப்பவன்; ஏழிசைகளிலும் உண்டாகும் சுவையே வடிவு கொண்டாற் போன்றவன், மறைகளில் கூறப் பெறுபவன்; தேவாதி தேவன் (2). பஞ்ச பூதங்கள், இருசுடர், பூமியிலுள்ள உயிர்கள், உயிரற்ற பொருள்கள் இவற்றிற்கு அந்தர்யாமியாயிருப்பவன்; கடல் நிற வண்ணன் (3). வாமன மாணியாக மாவலியின் யாக பூமியில் மூவடி மண் இரந்து பெற்று உலகளந்தவன்; நித்திய சூரிகள் அடியிணை வணங்க அலையெறி பாற்கடலில் துயிலும் பரமன், அனைவரையும் காப்பதற்கு அறிகுறியாக உயர்மணி மகுடம் சூடி நிற்பவன் (4). 2. பெரி. திரு. 4.3:2