பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 12 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி சாதுக்களை நலியும் அரக்கர்களை அழிப்பதற்காகத் தாய்போல் கருணை காட்டும் சக்கரவர்த்தி திருமகனாக அவதரித்தவன் (5). அரண் அமைந்த இலங்கை நகர் பொடிபட அம்பு தொட்டவன் (6). குவலயா பீடம் என்னும் யானையை அழித்தவன், கம்சன் பூசையில் வைத்திருந்த வில்லை முறித்தவன்; மல்லர்களை அடர்த்தவன்; கஞ்சனைக் காய்ந்தவன் (7). வாணனின் ஆயிரந் தோள்களும் அறுந்து விழும்படி திருவாழியைச் செலுத்தியவன்; திருவேங்கட மலையில் சேவை சாதிக்கும் வேங்கட கிருஷ்ணன் (8), மற்றும், “களங்கனி வண்ணா கண்ணனே என்றன் கார்முகி லேயென நினைந்திட்டு உளங்கனிந் திருக்கும் அடியவர் தங்கள் உள்ளத்து ஊறிய தேன் (கார்முகில் . காளமேகன்; கனிந்திருத்தல் - பரிபக்குவமாயிருத்தல்) போல் இனியனாயிருப்பவன் (9). இத்தகைய எம்பெருமானை 'வணங்கி அல்லல் தீர்ந்தேன்’ என்கின்றார் ஆழ்வார். இந்த எம்பெருமான் சந்நிதியில் இவ்வாழ்வார் பாசுரங்கள் அனைத்தையும் மிடற்றொலி கொண்டு ஓதி உளங் கரைகின்றோம். திருக்கடைக் காப்புச் செய்யுளின் இறுதிப் பகுதியாகிய, ஒழிவின்றிக் கற்றுவல் லார்கள் மாணவொண் குடைக்கீழ் வையகம் ஆண்டு வானவ ராகுவர் மகிழ்ந்தே. என்ற பகுதி இத்திருமொழியை ஒதியதன் பயனை எடுத்துரைக்கின்றது. "இப்பாசுரங்களை ஒன்றும் வழுவாமல் ஒதுபவர்கள் வெண்கொற்றக் குடையின்கீழ் வீற்றிருந்து இவ்வுலகை நெடுங்காலம் அரசாண்டுப் பின்னர் நித்திய சூரிகளின் திரள்களிலும் சென்று சேரப்பெறுவர்” என்று அறியும்போது பரிபூரண பிரம்மானந்தம் பெற்ற நிலையை அடைந்து விடுகின்றோம். இந்நிலையில் திவ்விய கவியின் திருப்பாடலும் நினைவிற்கு வர, அதனையும் ஓதி உள்ளக் கிளர்ச்சி அடைகின்றோம். ஊர்வேன் மடலை; ஒழிவேன் மடநாணம்; சேர்வேன் கரிய திருமாலை; - பார்அறிய அம்பொன் செய்கோயில் அரங்கன் அணிநாங்கூர்ச் செம்பொன்செய் கோயிலினிற் சென்று.” (ஒழிவேன் - துறப்பேன்; அம்பொன் - அழகியபொன்; அணி - அழகிய, சேர்வேன் - சென்று அடைவேன்) 3. நூற். திரு. அந் 35