பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செம்பொன் செய்கோயில் பேரருளாளன் | 13 என்பது பாடல். அய்யங்கார் பிராட்டி நிலையை அடைந்து மடலூர்தல் பற்றிப் பேசுகின்றார். இம்மடற்றிறம் பெரும்பாலும் ஆடவர்க்கே உரியது. அளவு மீறின ஆசையால் மகளிர்க்கும் சிறுபான்மைவரும். அன்றியும், மடலூர்தல் ஆடவர்க்கே உரியதென்றும், மடலூர்வேன் என்று சொல்லுதல் இருபாலார்க்கும் உரியதென்றும் உணர்தற்பாற்று. இங்குக் கூறியது தலைவியின் மடற்றிறம். பிரிவாற்றாது வருந்தும் தலைவி காதல் மிகுதியால் நாணம் துறந்து மடலூரத் துணிந்தமையைக் கூறுதல் இச்செய்யுளின் பொருளாகும். மடம், நாணம் என்பன மகடூஉக் குணங்கள் நான்கைச் சேர்ந்தவை; மற்றவை - அச்சமும் பயர்ப்புமாகும். இவற்றுள் மடமாவது அறிந்தும் அறியாது போன்றிருத்தல்; கொளுத்தக் கொண்டு கொண்டது விடாமை என்றும் கூறுவர். நாணமாவது - செய்யத் தகாதவற்றின்கண் உள்ளம் ஒடுங்குதல். அச்சமாவது - பல ஆடவர்களிடையில் செல்லக் கூசுதல், பயிர்ப்பாவது - கணவனல்லாத மற்றைய ஆடவரது ஆடை முதலியன தம்மேற்பட்டால் அருவருப்புக் கொள்ளுதல். இங்ங்னம் பல செய்திகளை அறிந்த நிலையில் மன நிறைவு பெற்று அரிமேய விண்ணகரத்தை நோக்கி நடை கட்டுகின்றோம்.