பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 16 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி 6. ரீ : திருமகள், அவளுடைய நாயகன் இவர்களுடைய சகல ஆன்மாக்களுக்கும் கைங்கர்யத்தைக் கொடுப்பதற்குரிய நித்திய சம்பந்தம். இஃது ஆறாம்பத்தால் கூறப் பெறுகின்றது. 'திருமாமகளிரும் தாம் மலிந்திருந்து (65:8) என்றும், அடிமை செய்வார் திருமாலுக்கே (6.5:11) என்றும், ஒசிந்த ஒண்மலராள் கொழுநன் (678) என்றும், ‘என் திருமாவற்கு (6.8:10) என்றும் 'கோலத்திருமாமகளோடு உன்னை (6-93) என்றும் இச்சம்பந்தம் தெரிவிக்கப் பெற்றிருப்பதைக் காணலாம். 7. மதே கைங்கர்யத்திற்கு எதிர்த்தலையான ஈசுவரனுடைய எல்லை இல்லாத இனிமை. இஃது ஏழாம் பத்தால் எடுத்துக்காட்டப் பெறுகின்றது. கன்னலே அமுதே' (7-12) என்றும், கொடியேன் பருகு இன்னமுதே' (7.1:7) என்றும் அலைகடல் கடைந்த ஆரமுதே' (7.2:5) என்றும், திருமாலின் சீர் இறப்பு, எதிர்காலம் பருகிலும் ஆர்வனோ' (7.9:9) என்றும் இவ்வேழுலகை இன்பம் பயக்க (7.10:11) என்றும் எம்பெருமானின் பரம போக்கியமாயிருக்கும் தன்மை கூறப்பெற்றிருப்பதைக் காணலாம். 8. நாராயண : எல்லாப் பொருட்கும் சுவாமியாயிருத்தல்'; அஃதாவது எல்லாப் பொருட்கும் தலைவனாயிருத்தல். இஃது எட்டாம் பத்தால் அறியக் கிடக்கின்றது. ‘அடியேன் பெரிய அம்மானே’ (8-1:3) என்றும், விண்ணவர்கோன் நங்கள் கோனை' (8.2:2) என்றும், அமர்ந்த நாதனை (8-4:10) என்றும், மூவுலகாளி (8.9.5) என்றும், நேர்பட்ட நிறை மூவுலகுக்கும் நாயகன் (8.9:11) என்றும் சொல்லப் பெற்றிருப்பதைக் காணலாம். 9. ஆய : நித்திய கைங்கர்யம். இஃது ஒன்பதாம் பத்தால் தெரிவிக்கப் பெறுகின்றது. பண்டை நாளாலே நின்திருவருளும் பங்கயத்தாள் திருவருளும் கொண்டு நின்கோயில் சீய்த்து (9-2:1) என்றும், நின் தீர்த்த அடிமைக் குற்றேவல் (9-2:2) என்றும், 'தொடர்ந்து குற்றேவல் செய்து (9.2:3) என்றும், கொடு வினையேனும் பிடிக்க (9.2:10) என்றும், 'உறுவது இது என்று உனக்கு ஆட்பட்டு (9.6:7) என்றும், நானும் மீளா அடிமைப் பணி செய்யப் புகுந்தேன் (98:4) என்றும் நித்தியமாய் உளதான தொண்டு சொல்லப் பெற்றிருப்பதைக் காணலாம். 10. நம : கைங்கர்யத்திற்குத் தடைகளாக உள்ள அனைத்தும் நீங்குதல். இது பத்தாம் பத்தால் பகரப் பெறுகின்றது. 'துயர் கெடும் 2. சுவாமி - சொம்மையுடையவன் சுவாமி. சொம் - சொத்து, உடைமை.