பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாங்கூர்க் குடமாடும் கூத்தன் 119 திருமடந்தை மண்மடந்தை இருபாலும் திகழத் தீவினைகள் போய்அகல அடியவர்க் கென்றும் அருள்நடந்து இவ்வேழுலகத் தவர்பணிய வானோர் அமர்ந்தேத்த இருந்த இடம்" (திருமடந்தை . பெரிய பிராட்டியார், மண் மடந்தை - பூமிப் பிராட்டியார்; தீவினைகள் - பாவங்கள்; அருள் நடந்து - கிருபை பண்ணி) என்பது ஆழ்வார் வாக்கு. இங்கு சந்நிதி பண்ணியுள்ள எம்பெருமான் போர்புரிந்த இடங்களிலெல்லாம் வெற்றியே கண்டு வந்த நரகாசுரனைத் தொலைத்த திருவாழியையுடையவன்; அமரர்கள் பொருட்டு அருள்கூாந்து அலைகடல் கடைந்து அமுதம் எடுத்தளித்தவன்; இரத்தினம் போல் சிறந்தவன், ஆழ்வார்க்கு அமுதம் போன்றவன் (2). உம்பரும் இவ்வேழுலகும் ஏழ்கடலும் எல்லாம் உடையபிரான், இடையர்கள் கண்ணால் கண்டு களிப்படையும்படி குவலயாபீடத்தின் கொம்புகளைப் பிடுங்கி அவற்றால் அந்த யானையையும் பாகனையும் கொன்றொழித்துப் பின்னர் கம்சனையும் குடுமியைப் பிடித்திழுத்து மஞ்சத்தினின்றும் கீழே தள்ளிக் கிரீடம் சிதற அடித்துக் கொன்றொழித்தவன் (3). நரசிம்ம வடிவங்கொண்டு இரணியன் மார்பைத் தன் வல்லுகிரால் பிளந்துகொண்டு அவன் மகன் பிரகலாதன் திறத்துப் பேரருள் செய்த பெருமான் (4). கண்டவர்கள் மனம் களிக்கும்படி மாவலியின் யாக பூமியில் வாமன மாணியாகச் சென்று மூவடி மண் இரந்து பெற்று மேலுலகங்களையும் இப்பூமண்டலத்தையும் மற்றும் எல்லாவற்றையும் அளந்து கொண்ட எம்பெருமான் (5). வாள் நெடுங்கண் மலர்க்கூந்தல மைதிலிக்காக இலங்கை மன்னன் இராவணனைக் கொல்ல சிலை வளைத்த தயரதன் சேய், ஆழ்வாரின் ஒப்பற்ற இரட்சகன்; நித்திய சூரிகளின் தலைவன் (6). தீமனத்துக் கம்சனின் கபடச் செய்கைக்கிணங்கக் கெட்ட எண்ணத்துடன் திரிந்து கொண்டிருந்த தேனுகனையும் நஞ்சு தீட்டிய முலையுடன் வந்த பூதனையையும் முடித்தவன். காமனைப் பயந்த கரியத் திருமேனியுடைய அம்மான் (7). கன்றதனால் விளவெறிந்து கனியுதிர்த்த காளை, காமருசீர் முகில் வண்ணன். இந்திரன் பசிக் கோபத்தினால் ஏழுநாள் விடாது கல்மாரி பொழிந்தபோது கோவர்த்தனத்தைக் குடையாகப் பிடித்துக் கன்றுகளையும் இடையர்களையும் காத்தருளின கோமான்; இடைச்சாதியின் மெய்ப்பாடு தோன்ற குடக்கூத்தாடியவன்; திருமங்கையாழ்வார் இத்தலத்து எம்பெருமானுக்குக் குடமாடு கூத்தன்' என்றே திருநாமம் சூட்டுகின்றார் (8). பேய் வடிவை மறைத்துத் தாய் வடிவுடன் நஞ்சு தீட்டிய முலையோடு வந்த 5. பெரி. திரு. 3.10.1 6. கண்ணன் உருக்குமணிப் பிராட்டியிடம் மன்மதன் அம்சனான பிரத்தியும்னனைப் பிறப்பித்தவன்.