பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15. வயலாளி மணவாளன் நூர்வசன பூஷணத்திலுள்ள சில வாக்கியங்கள் நம் சிந்தையில் குமிழியிடுகின்றன. "திருமாலிருஞ் சோலைமலையே” என்கிறபடியே, உகந்தருளின நிலங்கள் எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை இவனுடைய சரீரைக தேசத்திலே பண்ணும்.” (உகந்தருளின நிலங்கள் . திவ்விய தேசங்கள், சரீர ஏகதேசம் . சரீரைக தேசம் என வந்தது; வடமொழிப் புணர்ச்சி, ஏகதேசத்தில் - ஒரு கூற்றில்) எம்பெருமான் தெற்குத் திருமலை (திருமாலிருஞ் சோலை)யையும் திருப்பாற் கடலையும் என் தலையையும் ஒக்க விரும்பா நின்றான்; வைகுந்தத்தையும் திருவேங்கடத்தையும் என் உடலையும் ஒக்க, விரும்பா நின்றான் என்கின்றார் நம்மாழ்வார் (திருவாய் 10.7.8). தனக்கு விருப்பமான திவ்விய தேசங்கள் எல்லாவற்றிலும் பண்ணும் விருப்பத்தை ஞானியின் உடலின் ஒரு கூறிலே பண்ணும் என்கின்றார் பிள்ளை உலக ஆசிரியர் மேற்குறிப்பிட்ட வாக்கியத்தில், மேற்கூறிய கருத்தினை அடுத்த வாக்கியத்தில் தெளிவாக்குவர். அங்குத்தை வாசம் சாதனம்; இங்குத்தை வாசம் சாத்தியம்." (அங்குத்தை . அவ்விடம், இங்குத்தை - இவ்விடம், சாதனம் - அடைவதற்குத் துணையாக இரப்பது; சாத்தியம் . அதனால் அடையும் பயன்) உகந்தருளின நிலங்களிலே விரும்பி வசிப்பது தக்க உபாயங்களாலே மக்களை அகப்படுத்திக் கொள்ளுகைக்கு. இதனால் அவ்விடத்தில் வசிப்பதைச் சாதனம் என்கின்றார். இம்மக்கள் திருந்த இவர்கள் 1. ரீவசன பூஷ - 174 2. மேலது - 175