பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி மனங்களிலே தாம் வசிக்கப் பெற்றதனால் அந்தத் திவ்விய தேசங்களிலே நின்று பண்ணின கிருஷியின் பலமாகையால் இவ்விடத்தில் வசிப்பதைச் சாத்தியம் என்கின்றார். சாதனத்தையும் சாத்தியத்தையும் ஆழ்வார்கள் பாசுரங்களில் கண்டு மகிழலாம். நாகத்தனைக் குடந்தை வெஃகாத் திருஎவ்வுள் நாகத்தனை அரங்கம் பேர்அன்பில் - நாகத்து அணைப்பார் கடல்கிடக்கும் ஆதி நெடுமால் அணைப்பாா கருத்தன் ஆவான்." நாகத்து அணை - திருவனந் தாழ்வானாகிய படுக்கை; அணைப்பார் - எம்பெருமானோடு அணைந்தே இருக்க வேண்டும் என்ற ஆசையுடையார்; ஆவான் - ஆவதற்காக) என்பது பக்திசாரரின் திருவாக்கு. ஈண்டு குடந்தை, வெஃகா போன்ற இடங்களில் கிடத்தல் சாதனம்; கருத்தன் ஆதல், அதாவது அன்பருடைய நெஞ்சில் புகுந்தவனாக ஆதல் சாத்தியம். மலைமேல் தான்நின்று என்மனத்துள் இருந்தானை நிலைபேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே." (மலை - திருமலை; நிலை பேர்க்கல் ஆகாமை - இந்நிலையில் நின்றும் மாற்ற வொண்ணாமை, நிச்சித்து இருத்தல் - உறுதியாக எண்ணுதல்) என்பது நம்மாழ்வாரின் அருளிச் செயல். இங்கு மலைமேல் நிற்றல் சாதனம்; என் மனத்துள் இருத்தல் சாத்தியம். விஷ்ணு சித்தர் என்ற பெரியாழ்வாரும், பனிக்கடலில் பள்ளிக்கோளைப் பழகவிட்டு ஓடிவந்து, என் மனக்கடலில் வாழவல்ல மாயமணாள நம்பீ.' (பனிக்கடல் - குளிர்ந்த திருப்பாற்கடல்; பள்ளிக்கோள் - பள்ளி கொள்ளுதல்; பழகவிட்டு - பழகும்படி விட்டு; மனக்கடல் - இதயமாகின்ற கடல்) என்று கூறுவர். தன்னுடைய இன்பகரமான இடங்களைத் துறந்துவிட்டு எம்பெருமான் என் நெஞ்சையே தன்னுடைய இடமாக அங்கீகரித்தருளினான்” என்று பேசுகின்றார் ஆழ்வார். மேற்குறிப்பிட்ட சாதனம் காரணமாகவும் சாத்தியம் காரணமாகவும் வருகின்ற ஆசையின் உயர்வு தாழ்வுகளையும் விளக்குவர் பிள்ளை உலக ஆசிரியர். “கல்லும் கனைகடலும் என்கிறபடியே, இது சித்தித்தால் அவற்றில் ஆதரம் மட்டமாயிருக்கும்." 3. நான். திருவந். 36 5. பெரியாழ். திரு. 5.49 4. திருவாய். 10.4:4 6. யூரீவச. பூஷ - 176