பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலாளி மணவாளன் 123 (ஆதரம் - ஆசை மட்டம் - குறைவு) இந்த வாக்கியம், கல்லும் கனைகடலும் வைகுந்த வான்நாடும் புல்என்று ஒழிந்தனகொல்? ஏபாவம் - வெல்ல நெடியான் நிறம்கரியான் உள்புகுந்து நீங்கான் அடியேனது உள்ளத்து அகம்' (கல் - திருமலை; திருமாலிருஞ்சோலை மலை; கணைகடல் - திருப்பாற்கடல்; வான்நாடு . வானுலகம், புல்என்று - அற்பமாய்; ஏபாவம் . ஐயோ, பாவம்) என்ற நம்மாழ்வாரின் பாசுரத்தை உட்கொண்டதாகும். எம்பெருமானுக்குப் பரமபதத்திலும், திருப்பாற்கடலிலும், கோயில் திருமலை, பெருமாள் கோயில் முதலான உகந்தருளின இடங்களிலும் இருப்பதிற் காட்டிலும் மெய்யடியாருடைய இதயத் தாமரையில் வாழ்வதே சிறந்தது என்றும், சமயம் பார்த்து அன்பர்களின் நெஞ்சில் வந்து சேர்வதற்காகவே இவ்விடங்களில் வந்து தங்குகின்றான் என்றும் கொள்வர் நம்மாழ்வார். இவ்விடங்களில் தங்குவது உபாயம். அன்பர்களின் இதயத்தில் தங்குவது புருஷார்த்தம். பின்னது சாத்தியமாகிவிட்டால முன்னவற்றில் வாசம் செய்வதில் ஆதரம் மட்டமாய்விடும் என்பது பிள்ளை உலக ஆசிரியரின் கருத்தாகும். இந்த எண்ணங்கள் நம்மனத்தில் குமிழியிட்ட வண்ணம் மயிலாடுதுறையில் உள்ள காளியாக்குடி தங்கும் விடுதியிலிருந்து திருவாலி - திருநகரியை நோக்கிப் பயணமாகின்றோம். மயிலாடுதுறையினின்றும் திருவெண்காடு செல்லும் சில பேருந்துகள் திருநகரியைத் தொட்டுவிட்டுச் செல்லும். இவற்றில் ஒன்றின் மூலம் திருநகரியை வந்தடைகின்றோம். திருநகரிக்கும் திருவாலிக்கும் இடையே சுமார் மூன்று கிலோ மீட்டர் தொலைவு உள்ளது. திருநகரி எம்பெருமானுக்கு நாற்பது வேலி நிலம் இருப்பதாகச் சொல்லுகின்றனர். நாடோறும் பத்து அடியார்கட்குத் திருவமுது படைக்கின்றார் ஆழ்வார். திருநகரியிலுள்ள திருக்கோயிலில் திருமங்கையாழ்வாருக்கும் குமுதவல்லித் தாயாருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன. தவிர, திருமங்கையாழ்வார் வயிரவாளுடன் புரவிமேல் இவர்ந்த நிலையிலுள்ள வாகனக் காட்சி கண்கொள்ளக் காட்சியாக அமைந்துள்ளது. இங்குள்ள எம்பெருமான், தாயார், திருமங்கையாழ்வார், குமுதவல்லித் தாயார் இவர்களைச் சேவிக்கின்றோம். நாம் வந்த நாள் ஏகாதசியாக இருந்ததால் 7. பெரி. திருவந். 68