பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலாளி மணவாளன் 125 எல்லாவிடங்களிலும் பரவி இருப்பதனால் எங்கும் செந்தழல் பரவியிருப்பது போன்ற காட்சி தருகின்றன (3-5:1). புன்னை மரங்களும் சுரபுன்னை மரங்களும் பொருந்தியிருக்கின்றன சோலைகளில் அங்குள்ள விசாலமான தடாகங்களில் அன்னங்கள் தங்கி வாழ்கின்றன (4). புன்னை ஞாழல் மரங்களின் நிழலில் குளிர்ந்த தாமரைப் பூவின்மீது ஆண் நண்டுகள் தங்கியிருக்கின்றன (7), இளவண்டுகள் செண்பகப் பூவையும் மல்லிகைப் பூவையும் தழுவி அவற்றை விட்டு நீங்கித் தென்னை மரங்களின் பாளைகளில் உள்ள தாதினை அளைகின்றன (8). கருப்பஞ்சாறு அட்ட புகை காளமேகம்போல் எங்கும் பரவி மணம் வீசுகின்றது; சோலைகளி லுள்ள மயில்கள் அப்புகைத் திரளை மேகத்திரளாக மயங்கிக் களித்துக் கூத்தாடுகின்றன (2). அலையெறிகின்ற நீர்வளம் பொருந்திய வயல்களில் செந்நெற் பயிர்களை அறுப்பவர்களின் முகத்தில் மீன்கள் குதித்துப் பாய்ந்து கருப்பஞ் சோலைகளில் சென்று சேர்கின்றன (3). துதிப் பாடல்களின் மதுரமான ஓசையும், சங்குகளின் முழக்கமும், பலவேறு வகைப்பட்ட இசைக் கருவிகளின் ஒலியும், மாதர்களின் நடன ஒலியும் நீங்காதிருக்கப் பெற்றது திருவாலி (5). சந்தியா வந்தனம் முதலிய நித்திய கருமங்கள் இவற்றைத் தெரிவிக்கும் வேதங்களைத் தொன்றுதொட்டு ஒதியும் ஒதுவிடத்தும் வரும் அந்தணர்கள் நிறைந்திருப்பது இத்திவ்வியதேசம் (6). இயற்கைச் சூழலில் ஈடுபட்டிருக்கும் நம் மனம் ஆழ்வாரின் இறையநுபவத்தைப் பற்றிச் சிந்திக்கின்றது. எம்பெருமான், தன்னை இவ்வாழ்வார் நினையாதிருந்தும், தானாகவே இவரைப் பொருட்படுத்தி இவருடைய நெஞ்சிலே வந்து குடிகொண்டான். தன்னையொழிய வேறொன்றிலும் நெஞ்சு பட்டி மேயாதபடி ருசியையும் பிறப்பித்தான். ஒரு நொடிப் பொழுதாகிலும் இறைவனை விட்டுப் பிரிந்தால் பிழைக்க முடியாது என்ற நிலையையும் பிறப்பித்தான். இதை எண்ணிய ஆழ்வார், ‘இனி நான் உன்னைப் போக விடேன்; என் நெஞ்சிலேயே நிரந்தரமாகக் குடியிருந்து ஒழிவில் காலமெல்லாம் அடிமை கொண்டருள வேண்டும்” என்கின்றார். இதனைப் பாசுரங்கள் தோறும் பன்னியுரைக்கின்றார். வந்துனது அடியேன் மனம்புகுந்தாய்; புகுந்ததன்பின், வணங்கும்என் சிந்தனைக்கு இனியாய்" (வணங்கும் - வணக்கமுற்ற) 12. பெரி. திரு. 3.51