பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி நீலத் தடவரை மாமணி நிகழக் கிடந்ததுபோல் அரவுஅணை வேலைத்தலைக் கிடந்தாய்; அடியேன் மனத்து இருந்தாய்." (வரை - மலை; நிகழ - விளங்க வேலை - திருப்பாற்கடல்) புந்தியேன் மனத்தே புகுந்தாயைப் போகல் ஒட்டேன்." என்று பலவாறு உரைத்துள்ளதைக் கண்டு மகிழ்க. பாசுரந்தோறும் 'திருவாலி அம்மானே என்று ஆழ்வார் விளித்து மகிழ்வதையும் கண்டு அநுபவிக்கலாம். கீழே கண்ட மானச அநுபவம் முதிர்ந்து உண்மையான நேர்க்காட்சி போன்று வளர்ந்து விடுகின்றது. ஆற்றாமையும் மீதுர்ந்து விடுகின்றது. கரைபுரண்ட ஆற்றாமையால் ஆழ்வார் தலைவனோடு கலந்து பிரிந்த ஒரு பிராட்டியின் நிலையை ஏறிட்டுக்கொண்டு பரகால நாயகியாகி அந்நிலையில் பேசுகின்றார். எம்பெருமான் விரைந்து மீண்டு வரக் காணாமையாலும், அவனைப் பிரிந்து தான் ஆற்றியிருக்க இயலாமையாலும், தானே அவன் இருப்பிடம் நோக்கிச் செல்லுவதற்கு இயலாதவாறு தன் மேனி மெலிந்து கிடப்பதாலும், கண்ணிற்பட்ட வண்டு, குருகு முதலிய பறவைகளைத் தூது விடுகின்றார். அஃதாவது ஆழ்வார் ஞானம் அநுட்டானம் இவை நன்றாகவே உடையவரான சில மகான்களைத் தம்மை எம்பெருமான் பக்கல் சேர்ப்பதற்குரிய ஆசாரியராக வரித்து அவர்களை நோக்கிச் சொல்லுகின்றார் என்று கொள்க. கீழ்க்கூறிய கருத்து ஆசாரிய ஹிருதயம் கூறும் கருத்தினையொட்டியது. பறவைகளைத் தூது விடுவதற்குரிய உட்பொருளை இந்நூல், சேர்ப்பாரைப் பட்சிகளாக்கி, ஜ்ான கர்மங்களைச் சிறகு என்று, குருஸ்ப்ரமசாரி புத்ர சிஷ்ய ஸ்தானே பேசும்." (ஸ்ப்ரமசாரி - ஒருசாலை மாணாக்கர்; ஸ்தானே - இடத்தில்) என்று குறிப்பிடும். “விண்ணோர் பிரானார், மாசுஇல் மலரடிக்கீழ் எம்மைச் சேர்விக்கும் வண்டுகளே' என்று நம்மாழ்வாரும் அருளிச் செய்துள்ளமையால் பகவத் விஷயத்தில் கொண்டு சேர்க்குமவாகள் பறவைகளாகக் கொள்ளப்பெறுவர். இரண்டு சிறகுகளைக் கொண்டு 13. பெரி. திரு. 3.5:2 16. ஆசா. ஹிரு - 150 14. பெரி. திரு. 3.5:6 17. திருவிருத் - 55 15. இதனை மகள்.பாசுரம் என்று வழங்குவர்