பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலாளி மணவாளன் 127 பறவைகட்கு எங்ங்னம் விசும்பில் பறந்து செல்லுதல் இயலுகின்றதோ அங்ங்னமே ஞானம், ஒழுக்கம் (அநுட்டானம்) என்னும் இரண்டாலும் இறைவன் அடையப் பெறுகின்றான் என்பது ஆன்றோர் கொள்கை. இங்கு ஓர் ஐதிகம்: நஞ்சீயர், நோய்வாய்ப்பட்டு இருக்கையில் அவர்தம் சீடர்களில் ஒருவரான பெற்றி என்பவர் விசாரிக்கச் சென்று உரையாடுகையில் இப்போது சுவாமிக்கு என்ன திருவுள்ளம்? என்று கேட்க, அதற்கு நஞ்சீயர் 'தூவிரிய மலருழக்கி"த் திருப்பாசுரங்களைக் காதாரக் கேட்கவும், பெருமாள் எழுந்தருளப் பின்னும் முன்னும் சுற்றும் வந்து சேவிக்கவும் விருப்பமாயுள்ளது என்று அருளிச் செய்தார். உடனே வரந்தரும் எம்பெருமாளரையர் என்பவரை எழுந்தருளப் பண்ணிக்கொண்டு வந்து இத்திருமொழியைச் சேவிக்கச் சொல்லிக் கேட்டருளா நிற்கையில், நான்காம் பாசுரத்தில், தானாக நினையானேல் தன்னிணைந்து நைவேற்குஓர் மீனாய கொடிநெடுவேள் வலிசெய்ய மெலிவேனோ? (தானாக - அவன் தானாகவே நினையானேல் - என்னை நினையாதிருந்தாலும்; தன்நினைந்து - அவனையே நினைத்துக் கொண்டு; நைவேற்கு மனம் தளர்ந்திருக்கும் என்னை; ஒர் மீனாய... நெடுவேள் - மன்மதன், மெலிவேனோ - இளைத்துப் போவேனோ) என்னும் அளவில் வந்தவாறே நோவுபடுவதற்கு முன்பே வந்து உதவாமற் போனாலும் நேர்ந்த நோயைப் போக்குவதற்காகிலும் வந்தாலாகாதோ? என்றருளிச் செய்து மிகவும் தளர்ந்து வருந்தினார் என்பது எல்லோரும் அறிந்த செய்தி. ஆகவே, இத்திருமொழி பகவத் காமுகர்களை நன்கு உருக்கும் என்பது வெள்ளிடை மலை. பரகால நாயகி வண்டை நோக்கிப் பேசுகின்றாள் (மூன்று பாசுரங்களில்) தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே பூவிரிய மதுநுகரும் பொறிவரிய சிறுவண்டே தீவிரிய மறைவளர்க்கும் புகழாளர் திருவாலி ஏவரிவஞ் சிலையானுக்கு என்நிலைமை உரையாலே." து . சிறகு, உழக்கி - மிதித்து; விரிய - மலர மதுதேன்; பொறி - புள்ளி; வரி ரேகை, விரிய அக்நி காரியங்கள் விசாலமாகப் பரவும்படி) இப்பாசுரத்தில் வண்டுகளை வைணவர்களாகக் கொள்ளுதல் வேண்டும். என் நிலைமை உரையாயே என்பதில் உரையாயே 18. பெரி. திரு. 3.6 19. பெரி. திரு. 3.61