பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 சோழநாட்டுத் திருப்பதிகள் - இரண்டாம் பகுதி என்பதற்குப் பெரியவாச்சான் பிள்ளை அவர்களின் வியாக்கியானம். “கொடு வரவேண்டா, அறிவிக்கு மித்தனையிறே வேண்டுவது. வருகை அவன் பணியே; வாரா தொழியுமன்று ரட்கனுக்குக் குறையாமே. நீங்களறிவித்த அநந்தரம் (உடனே) உங்கள் பேச்சுக் கேட்டுத்தானே வாரா நிற்கும்” என்பது. அடுத்த பாசுரத்திலும், அறுகால சிறுவண்டே மணிகழுநீர் மருங்கலரும் வயலாளி மணவாளன் பணியறியேன் நீசென்றுளன் பயலைநோய் உரையாயே." (மணி - அழகிய கழுநீர் - செங்கழுநீர்ப் பூக்கள்; மருங்கு - நாற்பக்கத்திலும்; பணி செய்தி, பயலை - பசலை) என்று வண்டினை நோக்கியே பேசுகின்றாள் பரகாலநாயகி. ஈண்டு 'அறுகால சிறுவண்டே' என்பதற்கு இரண்டு காலாகவும் நான்கு காலாகவும் இன்றியே விரைந்து செல்லுகைக் குறுப்பாக அறுகால்கள் இருக்கப் பெற்ற பாக்கியம் என்னே என்று வியந்து கூறுவதாகச் சில ஆசார்யர்கள் பொருள் கூறினராம். இப்பொருளில் சிறப்பேதும் இல்லை; வண்டு செல்வதற்குச் சிறகேயன்றி கால்கள் அல்ல. இதற்குத் திருநெடுந்தாண்டகத்தில் (26) அறுகால சிறுவண்டே தொழுதேன் உன்னை என்ற விடத்தில் பட்டர் அருளிச் செய்த பொருள் நயஞ்செறிந்தது. அவர் கூறுவது : “வண்டே, நீ எம்பெருமான் பக்கல் சென்று என் நிலைமையை விண்ணப்பம் செய்து அவனது அருளைப் பெற்று மீண்டு வந்தாயாகில் நீ செய்த பேருபகாரத்திற்குத் தோற்று உன் திருவடிகளை நான் தலைமேல் அணிந்து கொள்வேன்; அப்போது என் தலை நிறைந்திருக்கும்படி உனக்கு ஆறுகால் உண்டாயிருக்கப் பெற்றது பரமபாக்கியம் என்கின்றாள்” என்பது. உள்ளுறைப் பொருளில், புருஷகார கிருத்யம்' செய்யும் பாகவதர்களே வண்டின் இடத்தில் நிற்பதால் பாகவதர்களின் திருவடிகள் உத்தேச்யமாகக் குறையில்லை. இவ்விடத்தில, எம்கானல் அகம்கழிவாய் இரைதேர்ந்திங் கினிதமரும் செங்கால மடநாராய்! திருமூழிக் களத்துஉறையும் கொங்குஆர்பூந் துழாய்முடிஎம் குடக்கூத்தர்க் கென்துதாய் நுங்கால்கள் என்தலைமேல் கெழுமீரோ நுமரோடே." (கானல் - கழி; தேர்ந்து - தேடி, கால - காலையுடைய கொங்குஆர் - தேன் மிகுந்த நூமர் - உன்னைச் சேர்ந்தவர்) என்ற தேனினும் இனிய திருவாய்மொழிப் பாசுரத்தையும் சிந்திக்க வேண்டியது. 20. பெரி. திரு. 3.6:2 21. உதவி செய்பவரின் செயல் 22. திருவாய். 9.7:t