பக்கம்:சோழநாட்டுத் திருப்பதிகள் 2.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலாளி மணவாளன் 131 கள்வன்கொல் யானறியேன் கரியான்ஒரு காளைவந்து வள்ளிமருங்குல் என்றன் மடமானினைப் போதவென்று வெள்ளிவளைக் கைப்பற்றப் பெற்றதாயரை விட்டகன்று அள்ளலம் பூங்கழனி அணியாலி புகுவர்கொலோ.” (காளை - இளையவன்; வள்ளி - கொடி, மருங்குல் - இடை மடமான் - இளமான் போத என்று - வாவா என்று அழைத்து; அள்ளல் - சேற்றுநிலம்) திருத்தாயார் சொல்லத் தொடங்கும்போதே 'கள்வன் கொல்' என்று எம்பெருமானைக் கள்ளனாகச் சங்கித்துச் சொல்லுகின்றாள். சாத்திரங்களில் சேதநன் கள்வனாகச் சொல்லப் பெறுகின்றான். எம்பெருமானுக்கே உரிமைப்பட்டதான ஆன்மாவைத் தனக்குரியதாகவும் பிறருக்குரியதாகவும் கருதுகின்ற சேதநன் 'ஆன்மாபகாரக் கள்ளன் எனப்படுகின்றான். தன் உடைமையைத் தான் கைக்கொள்ளுகின்ற பெருமானைக் கள்வன் கொல் என்று சொல்லப்பெறுகின்றது. செஞ்சொற் கவிகாள் உயிர்காத்து ஆட்செய்மின்; திருமா லிருஞ்சோலை வஞ்சக் கள்வன் மாமாயன் (திருவாய். 10-7-1) என்று நம்மாழ்வாரின் கூற்றையும் நோக்குக. வயலாளி மணவாளன் பரகால நாயகியைக் கவர்ந்து செல்கின்றதாகச் சொல்லுகின்ற இச்செய்தி பலரும் அறியக் கவர்ந்து சென்றமையைக் கூறுகின்றதா? அன்றி, எவரும் அறியாமல் கவர்ந்து சென்றமையைக் குறிப்பிடுகின்றதா? என்ற வினாக்கள் எழுகின்றன. மகளைத் தாய் அணைத்துக்கொண்டு கிடக்கையில் தனியாக வந்து கவர்ந்து சென்றதாகப் பிள்ளையமுதனார் பொருள் கூறினாராம். அதைப் பராசரப்பட்டர் கேட்டருளி “அங்ங்னம் வேண்டா, பலரும் கண்டு கொண்டிருக்கையில் தீவட்டிக் கொள்ளைக் கள்ளர் கொள்ளை கொண்டு போமாப்போலே கொண்டுசென்றதாகக் கொள்வது எளிது” என்று அருளிச் செய்தனராம். திருவாய்மொழியில் “உண்ணும் சோறு பருகும் நீர்” (திருவாய் 6-7) என்கின்ற திருவாய்மொழியின் போக்கும் இத்திருமொழியின் 26. பெரி. திரு. 3.7:1